என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North korea"

    • எங்களைத் தாக்கினால், எங்களின் அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம்.
    • எங்களை ஒடுக்க நினைக்கும் 'விரோதப் போக்கு' கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால். அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயார்.

    வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க இருக்கின்றனர்.

    இந்நிலையில் வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாடு பியாங்யாங் நகரில் கடந்த 7 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் கிம் ஜாங் அன் பேசிய உரை, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் பேசியதாவது:-

    "தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களைத் தாக்கினால், எங்களின் அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் தென்கொரியாவை குறிவைக்கும் வகையிலான நவீன ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதே எங்கள் இலக்கு.

    அதே நேரத்தில், அமெரிக்காவுடன் நாங்கள் சுமூகமான உறவை மேற்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. வடகொரியாவை அடைஅயத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். எங்களை ஒடுக்க நினைக்கும் 'விரோதப் போக்கு' கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால். அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயார்.

    அமெரிக்காவுடனான உறவு அவர்களின் கைகளில்தான் உள்ளது. அமைதியாக வாழ்வதா அல்லது மோதிக் கொள்வதா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

    இவ்வாறு கிம் ஜாங் அன் ஆவேசமாக பேசினார்.

    மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் கலந்து கொண்டார். இருவரும் கருப்பு நிற 'லெதர்' கோட் அணிந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ரசித்தனர். இந்த ராணுவ அணிவகுப்பில் அமெரிக்காவைத் தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. இது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கிம் ஜாங் அன் தயாராக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    தண்ணீருக்கு அடியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டிரோன்கள் மற்றும் விண்ணில் உள்ள எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை அடுத்த 5 ஆண்டுகளில் தயாரிக்கப் போவதாக கிம் அறிவித்துள்ளார். தென்கொரியாவை எதிரியாக அறிவித்துவிட்டு, அமெரிக்காவுடன் மட்டும் பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைத்துள்ள கிம் ஜாங் அன்னின் இந்த புதிய பாதை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ஆளும் கட்சி அமைப்பில் துணைத்துறை இயக்குனராக இருந்த கிம் யோ ஜாங் முழுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வடகொரியாவில் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-வது மாநாடு, தலைநகா் பியாங்யாங்கில் சமீபத்தில் நடந்தது. இதில் அதிபர் கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஆளும் கட்சி மாநாட்டில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங்வுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அமைப்பில் துணைத்துறை இயக்குனராக இருந்த கிம் யோ ஜாங் முழுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கிம் யோ ஜாங் தனது சகோதரரின் நெருங்கிய துணைத் தலைவர்களில் ஒருவராகவும், ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

    வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 9வது மாநாட்டில் கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 2016-ல் மீண்டும் தொடங்கப்பட்டது. இம்மாநாட்டில் பேசிய கிம் ஜாங், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு "கடுமையான பொருளாதாரத் தடைகளையும்" தட்டுப்பாடுகளையும் முறியடித்து, பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரவித்தார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொருளாதாரக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது கட்சியின் கடமை எனவும் தெரிவித்தார்.

    அடுத்ததாக இவரது மகள் கிம் ஜு ஆய், கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே  அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.
    • 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தனர்.

    வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது.

    2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.

    அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

    சமீபத்திய ராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரசு கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது.


    இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

    இது நடந்தால், 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல்முறையாக கிம் ஜு யே பெண் அதிபராக பொறுப்பேற்பார்.

    தென்கொரிய உளவு அமைப்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இது குறித்து வடகொரியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன் கடந்த 2011 டிசம்பரில் தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் வட கொரிய அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் கொரிய டிரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
    • அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.

    சியோல்:

    தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டது. அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறிய வடகொரியா, உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், அந்த டிரோன் தங்களுடையது அல்ல. வடகொரியாவைத் தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம்.
    • எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வடகொரியாவின் அரசு ஊடகம் மூலம் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில்,

    "அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது. எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம். அமெரிக்கா உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை இழந்துவிட்டது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

    தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். ஆனால், வடகொரியா அப்படிப்பட்டது அல்ல. எங்களது நட்பு நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

    டிரம்பின் இந்தச் செயல் உலகை மற்றுமொரு பேரழிவை நோக்கித் தள்ளுகிறது. மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.

    உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை எதிர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த இலக்கு நீங்களாகக் கூட இருக்கலாம்.

    டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். மதுரோவின் கைது என்பது ஒரு தனிமனிதனின் கைது அல்ல, அது உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்." என்று தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
    • கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.

    இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கருதுகிறார். எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.

    இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

    • தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடக்கிறது.
    • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பியாங்காங்:

    உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் புகார் அளித்துள்ளது.

    • இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
    • நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

    ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.

    இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. 

    இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.

    ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
    • தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.

    47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.

    வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.

    விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.

    அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

    தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

    அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
    • வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.

    சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
    • இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    பியாங்காங்:

    வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

    ×