என் மலர்
நீங்கள் தேடியது "செர்கே லாவ்ரோவ்"
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-ரஷியா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷியாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.
- உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
- ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மாஸ்கோ:
உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.
போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இரு தரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் இறக்கி சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் அரசுமுறை பயணமாக வடகொரியாவுக்கு இன்று செல்கிறார். 3 நாட்கள் பயணமாக இதில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னைச் சந்தித்து ராணுவ உதவிகளைக் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- டெல்லியில் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
- இதில் பங்கேற்க 40 நாடுகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
இதில், சீன வெளியுறவு மந்திரி குவின் கேங், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
- இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
- ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






