என் மலர்
நீங்கள் தேடியது "S Jaishankar"
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-ரஷியா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷியாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
- மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புதின்-ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கிரெம்ளினில் அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
- இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை.
- குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசவில்லை என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-
அவர் திட்டவட்டமாக கூறாத சில விசயங்கள் உள்ளன. அவர் சில குறிப்புகளை சொன்னார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசவில்லை என்று கூறினார். ஆனால் அமெரிக்கா தலையிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. இது சுவாரஸ்யமானது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் 3ஆவது நாடு மத்தியஸ்தரராக செயல்படவில்லை என்று இந்தியா கூறியது. அதேவேளையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை, வர்த்தகம் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க்ஜின் இன்று இந்தியா வந்தார்.
- அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
புதுடெல்லி:
இந்தியா, தென் கொரியா இடையே தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரசுமுறைப் பயணமாக தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜின் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்தார்.
இந்நிலையில், தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க்ஜின் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தென் கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜினை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்றைய எங்கள் விவாதங்கள் நமது சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரையும் தென் கொரியா வெளியுறவு மந்திரி சந்திக்கிறார்.
- இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
- ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதிலாக, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று (ஷஜனவரி 12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்பாடயினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சமும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது பாரப்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதாக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
- காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை தள்ளிவிட்டனர்.
- இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின் போது சத்தம் இல்லத்தில் அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பிரிட்டன் வெளியுறவு துறை அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தம் இல்லத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சத்தம் இல்லத்தில் இருந்து வெளியேறிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கிய ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில், அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கி ஓடிவந்த காலிஸ்தான் ஆதரவாளரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்த பாரிகார்டு அருகே தள்ளிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
"வெளியுறவுத் துறை அமைச்சரின் பிரிட்டன் வருகையின் போது சத்தம் இல்லத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கு பிரிட்டன் அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. எனினும், பொது நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுப்பது அல்லது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஈடுபட்டனர். எங்களது தூதரக விருந்தாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- அபுதாபியின் முதல் இந்து கோயிலின் இடத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்
- இந்த கோயில் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.
அபுதாபி:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக வளைகுடா நாட்டிற்கு நேற்று சென்றார். அங்கு அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலின் முதல் இடத்தைப் பார்வையிட்டார். கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விநாயக சதுர்த்தி அன்று அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்துக் கோயிலுக்குச் சென்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டேன். விரைவான முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட அனைவரின் பக்தியையும் ஆழ்ந்து பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மந்திரி ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அபுதாபியில் அமையவுள்ள இந்தக் கோயில் சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும். இந்திய கோவில் கைவினைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளன. மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்துக் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.






