என் மலர்
உலகம்

ரஷிய அதிபர் புதினுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
- இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.
அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Next Story






