என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vladmir Putin"

    • இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம்.
    • நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இருநாள் அரசுமுறை பயணமாக இந்த வாரம் (டிசம்பர் 4-5) இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு இறக்குமதியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

    புதினின் இந்தியப் பயணம் குறித்தும், இருநாடுகளுக்கிடையேயான உறவு குறித்தும் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,

    "ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவு என்பது வெறும் ராஜாங்கரீதியானது மட்டுமல்ல. இந்த இருதரப்பு உறவு, பரஸ்பர புரிதலின் ஆழமான வரலாற்று பின்னணியில் அமைந்தது. இந்தியர்களின் வரலாற்று வளர்ச்சியில் தோளோடு தோளாக நின்றதில் பெருமைக் கொள்கிறோம். அதேநேரத்தில், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய தொடர்புகளில் இந்தியாவின் நட்புரீதியான நிலைபாடுகளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 

    இருநாடுகளும் அவரவர்களின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம், அவை பெரும்பாலான துறைகளில் உண்மையில் ஒத்துப்போகின்றன. பாதுகாப்புத் துறையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நினைவில் கொள்வோம். இது வெறும் வர்த்தகம் சார்ந்தது மட்டுமல்ல. உயர் தொழில்நுட்பங்களின் பரிமாற்றம் ஆகும். சந்தை மதிப்பில், இந்தியாவிற்கு எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய விநியோகஸ்தராக ரஷ்யா இருக்கிறது.

    இந்த வர்த்தகம் இந்தியாவிற்கு பெரும் நன்மை பயக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இது இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. மூன்றாம் நாடுகளால் பாதிக்கப்படாத வகையில் நமது வர்த்தக தொடர்புகளை கட்டமைக்கவேண்டும். நாங்கள் இந்தியாவில் இருந்து வாங்குவதை விட அதிகமாக விற்பனை செய்கிறோம் என்பதை நன்கு அறிவோம். புதினின் வருகையின்போது இதுகுறித்து ஆலோசிக்கப்படும். இந்தியாவில் இருந்து நிறைய பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புகிறோம். அதற்கான ஒரு நிகழ்வாக இது அமையும்" என தெரிவித்தார்.  

    • இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • ரஷிய அதிபர் புதினை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    மாஸ்கோ:

    இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

    அதிபர் புதின் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது
    • அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது.

    மாஸ்கோ:

    இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

    ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிட்டால் தங்கள் நாட்டின் இருப்புக்கு ஆபத்து என கருதிவரும் இஸ்ரேல் நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

    சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அவர்களின் உரையாடலில் மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் தாக்குதலால் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை குறித்து விவாதித்தனர்.

    மேலும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தை குறித்தும் அவர்கள் உரையாடினர்.

    • பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.
    • பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் கண்டனம் தெரிவித்தார்.

    காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.

    பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர். 

    பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, "காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிர் இழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை டிரம்ப் தெரிவித்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதின் கூறும்போது, "இந்த சம்பவம் எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு ரஷியா உறுதி பூண்டுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் துயர விளைவுகளுக்கு உண்மையான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    இத்தாலி பிரதமர் மெலோனி கூறும்போது, "பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவர்கள், அரசாங்கம் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் எனது ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    • உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
    • ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என அதிபர் புதின் தெரிவித்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதில் உறுதியான உடன்பாடு எட்ட முடியவில்லை.

    இந்நிலையில், ஈஸ்டர் நாளில் மட்டும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், இன்று (ஏப். 19) மாலை 6 மணி முதல் (ரஷிய நேரப்படி) நாளை (ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை தற்காலிக போர் நிறுத்தம் நிலவும் என குறிப்பிட்டுள்ளார்.

    ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்தக் காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்க்கிறோம் என ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது

    • அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.
    • அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மாஸ்கோ:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஒரு ஆயுதமேந்திய நபர் அவரை படுகொலை செய்ய முயன்றபோது அவரது தைரியத்திற்காக அவரைப் பாராட்டினார், மேலும் மாஸ்கோ குடியரசுக் கட்சியுடன் உரையாடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

    ஜூலை 14 அன்று பென்சில்வேனியாவில் நடந்த கொலை முயற்சியின் போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு உண்மையான மனிதனைப் போலவே செயல்பட்டார்.

    என் கருத்துப்படி, அவர் மிகவும் சரியாக, தைரியமாக, ஓர் உண்மையான மனிதனைப் போல நடந்துகொண்டார். நீங்கள் தேர்தலில் வென்றதற்கு வாழ்த்து தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன்.

    எதிர்கால டிரம்ப் நிர்வாகம் விரும்பினால் தொடர்பைத் தொடர தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

    • ரஷிய - உக்ரைன் போர் தொடர்பாக புதினை அலெக்ஸி ஜிமின் கடுமையாக விமர்சித்து வந்தார்.
    • குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.

    உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    2014 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷியாவை விட்டு வெளியேறினார்.

    பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.

    பின்னர் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷிய போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    • உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார்.
    • உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது.

    மாஸ்கோ:

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.

    உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷியா படையில் வடகொரிய ராணுவ வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் ரஷியாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் அனுமதி கேட்டிருந்தது.

    உக்ரைனுக்கு உதவும் வகையில் ஏவுகணைகளை பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் தற்போது இருப்பதை விட சர்வதேச அளவில் பதற்றத்தை இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளார் என கிரெம்ளின் அரண்மனை செய்தி தொடர்பாளர்

    டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் புதின் இந்தியா வரும் தேதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    2014-ம் ஆண்டு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #MH17investigation #Russianinvolvement #VladmirPutin

    மாஸ்கோ:

    உக்ரைனில் கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்ட போது, கிரீமியா பகுதி மக்கள் ரஷ்ய கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தனர். இதனால், ரஷ்யா ராணுவ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யாவுடன் இணைத்தது. 

    அந்தாண்டில் ஜூலை 17-ம் தேதி, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-17 விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்றது.அப்போது ஒரு ஏவுகணை இந்த விமானத்தை தாக்கியதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். 

    விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என அறிய சர்வதேச அளவில் கூட்டு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணை அறிக்கையின்படி, ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை பிரிவிலிருந்துதான் பக்-டெலர் ரக ஏவுகணை ஏவப்பட்டு, மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் ஏவுகணையை உபயோகித்தது யார் என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதனிடையே, நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஸ்டெப் பிளாக், விமானம் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரஷ்யாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஸ்டெப் பிளாக்கின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, ரஷியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். #MH17investigation #Russianinvolvement #VladmirPutin
    ×