என் மலர்
நீங்கள் தேடியது "எஸ் ஜெய்சங்கர்"
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார்.
- மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
மாஸ்கோ:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா -ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புதின்-ஜெய்சங்கர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
கிரெம்ளினில் அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
- தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பார்க்ஜின் இன்று இந்தியா வந்தார்.
- அவர் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
புதுடெல்லி:
இந்தியா, தென் கொரியா இடையே தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அரசுமுறைப் பயணமாக தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜின் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்தார்.
இந்நிலையில், தென்கொரிய வெளியுறவு மந்திரி பார்க்ஜின் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தென் கொரிய வெளியுறவு மந்திரி பார்க் ஜினை வரவேற்பதில் மகிழ்ச்சி. இன்றைய எங்கள் விவாதங்கள் நமது சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரையும் தென் கொரியா வெளியுறவு மந்திரி சந்திக்கிறார்.
- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவேயில் பயணம் மேற்கொண்டார்.
- பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
அசன்சியன்:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தென் அமெரிக்கா நாடான பராகுவே சென்றடைந்தார்.
இந்நிலையில், பராகுவேயில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார். தலைநகர் அசன்சியன் நகரின் முக்கிய நீர்முனையில் சிலையை அமைத்துள்ள அசன்சியன் நகராட்சியின் முடிவை பாராட்டினார்.
மேலும், பராகுவேயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அங்கு சுமார் இரு நூற்றாண்டுக்கு முன் பராகுவேயின் சுதந்திரப் போராட்ட இயக்கம் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காசா டி லா இன்டிபென்டென்சியா பகுதியை அவர் பார்வையிட்டார்.






