என் மலர்
நீங்கள் தேடியது "UK"
- தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின.
- பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள வோல்டைகா வனப்பகுதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது. அப்போது ஏற்பட்ட தீ மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகின. மேலும் பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புக்கொண்டு உள்ளது.
- கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.;
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் பிரிட்டன் ஜோடி வெற்றி பெற்றது.
டொராண்டோ:
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஜூலியன் கேஷ்-லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி, ஜெர்மனியின் டிம் புட்ஸ்-கெவின் ரெவெயிட்ஸ் ஜோடி உடன் மோதியது.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் ஜோடி 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
- பிரதமர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
- லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும் என தெரிவித்தார்.
இங்கிலாந்து உடனான வரி குறைப்பின் எதிரொலியால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும்.
மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.
காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் குறைகிறது.
பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி குறையும்.
- பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி வரை பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லியில் இருந்து வரும் 23-ம் தேதி பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, பிரிட்டனுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிபார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு பிரிட்டன் வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பிரிட்டன் நாட்டின் விஸ்கி, கார்கள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எளிதாக்கும் அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கலாம் எனத்தெரிகிறது.
பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் மோடி 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60-வது தேசிய தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தனது பயணத்தின் போது மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
மாலத்தீவு-இந்தியா இடையிலான உறவில் சமீப காலமாக கசப்புணர்வுகள் அதிகரித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- இந்தியர்களுக்கு சொந்தமான 1194 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 72.17 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிப்பு.
பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராணட் தோர்ன்டன் என்ற உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர் (India Meets Britain Tracker) வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்து 1,194 ஆக உள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு 68.09 பில்லியன் பவுண்ட் ஆக இருந்த நிலையில், 2024-ல் 72.14 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் 1,26,720 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
விப்ரோ ஐ.டி. சர்வீசஸ் நிறுவனம் 448 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜோஹோ கார்பரேசன் லிமிடெட்டின் வளர்ச்சி 197 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் 4 பேர் மீது பொருளாதார தடை.
- இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உள்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது.
இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணை தலைவராக இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு இலங்கை பாராளுமன்றத்தில் துணை மந்திரியான வினாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு பேரும் இங்கிலாந்துக்கு பயணம் செய்யவும், அங்குள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக கொலை, துன்புறுத்தல் அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான 4 பேர் மீது தடைவிதிக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், "இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுமார் 30 வருட சண்டையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமானதாக, இலங்கை அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
- உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
- இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

"இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்," என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
- போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லண்டன்:
பிரான்ஸ் அருகே ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொணடனர். அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்தது.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
- பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்க பிரதமர் உறுதியளித்தார்.
- பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது.
லண்டன்:
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் லிஸ் டிரஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரிஷி சுனக் கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்றார்.
பிரிட்டனின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் பேசிய பிரதமர் ரிஷி சுனக், நாட்டின் அனைத்து பிரச்சனைகளும் 2023ல் தீர்ந்துவிடாது என கூறினார். அதேசமயம் 2023ம் ஆண்டு புதிய வாய்ப்புகளை வழங்கி, மீண்டும் பிரிட்டன் பொருளாதாரம் சிறப்பாக உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து பிரதமர் ரிஷி சுனக் உரையாற்றினார். அப்போது, நாட்டில் பணவீக்கத்தை பாதியாக குறைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தேசிய கடனைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்த அவர், சிறிய படகுகளில் வந்து பிரிட்டன் கரையில் குடியேறுபவர்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற உள்ளதாகவும், பிரிட்டனின் பொது சுகாதார சேவையில் நிலவும் பின்னடைவைக் குறைக்கவும் அவர் உறுதியளித்தார்.
பிரிட்டனில் கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 10.7 சதவீதமாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தை விட சற்று குறைவு. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எதிரொலியாக, பிரிட்டனில் எரிபொருள் மற்றும் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார்.
- வெயின்ரைட்-இன் வங்கி கணக்கை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஜாலியாக வசித்து வந்துள்ளார்.
பிரிட்டன் சேர்ந்த நபர் இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இவர் ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, எப்படி இந்த மாதிரி எல்லாம் செய்ய முடியும் என்று விழிபிதுங்க வைத்துள்ளது.
2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால், இவரது உடல் ஆகஸ்ட் 22, 2020 அன்று தான் கிடைத்தது. ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
முதியவரின் உடலை மறைத்து வைத்துக் கொண்டதோடு டேமியன் ஜான்சன் உயிரிழந்த ஜான் வெயின்ரைட்-இன் வங்கி கணக்குகளை பயன்படுத்தி அவரது பென்ஷன் தொகையை கொண்டு ஷாப்பிங் செய்வது, ரொக்கத்தை எடுத்து செலவிடுவது என்று ஜாலியாக வசித்து வந்துள்ளார்.
வெயின்ரைட்-இன் வங்கி கார்டு கொண்டு பணம் எடுத்துக் கொள்வது, பொருட்களை வாங்குவது மற்றும் தனது சொந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவது போன்ற செயல்களில் செப்டம்பர் 23, 2018 முதல் மே 7, 2020 வரை டேமியன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட டேமியன் ஜாமின் பெற்று வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.
- இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளது
- சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும்.
லண்டன்:
பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது.
கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.
இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.
பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று கூட முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும்.
அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும்.
- சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களால் அந்நாட்டில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கான மசோதா சட்டமாவதற்கான கடைசி தடையும் நீங்கியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் "படகுகளை நிறுத்துவோம்" என்று அறிவித்து பெருமுயற்சி செய்து உருவாக்கிய இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" இனி சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது.
சில உறுப்பினர்கள் அடிமைப்பாதுகாப்பு தொடர்பான திருத்தங்களையும், குழந்தை புலம்பெயர்ந்தோரை எவ்வளவு காலம் தடுத்து வைக்கலாம் என்பதற்கான வரம்புகளை குறிப்பிட வேண்டும் என முன்மொழிந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பில் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்த மசோதாவின்படி படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும். இந்த மசோதா மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக உள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
2022 ஆம் ஆண்டில் 45,000க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், தென்கிழக்கு பிரிட்டனின் கரைகளில் சிறிய படகுகளில் வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் புலம் பெயர்வோர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது 2018ஐ விட 60% அதிகரித்திருக்கிறது.






