வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன், மாலத்தீவு பயணம்

பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி வரை பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, அங்கு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன், மாலத்தீவு பயணம்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

டெல்லியில் இருந்து வரும் 23-ம் தேதி பிரிட்டன் செல்லும் பிரதமர் மோடி, பிரிட்டனுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிபார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு பிரிட்டன் வரியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, பிரிட்டன் நாட்டின் விஸ்கி, கார்கள் உள்ளிட்டவைகளை இந்தியாவில் விற்பனை செய்வதை எளிதாக்கும் அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கலாம் எனத்தெரிகிறது.

பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் மோடி 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60-வது தேசிய தினவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தனது பயணத்தின் போது மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலத்தீவு-இந்தியா இடையிலான உறவில் சமீப காலமாக கசப்புணர்வுகள் அதிகரித்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com