என் மலர்
நீங்கள் தேடியது "Alien"
- 79 வயதாகும் ஸ்பீல்பெர்க் 'டிஸ்க்ளோஷர் டே படத்தை இயக்கியுள்ளார்.
- இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது சாத்தியமற்றது.
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சைன்ஸ் பிக்ஷன் புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.
1982 இல் இவர் வேற்றுகிரகவாசி பற்றி இயக்கிய "E.T. தி எக்ஸ்டரா டெரஸ்ட்டியல்- " படம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து ஜுராசிக் பார்க் உட்பட பல்வேறு ஜானர்களில் பல கிளாசிக் படங்களை இயக்கினார் ஸ்பீல்பெர்க்.
79 வயதாகும் ஸ்பீல்பெர்க் தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.
ஜோஷ் ஓ'கானர், எமிலி பிளண்ட், கோல்மன் டொமிங்கோ மற்றும் வயட் ரஸ்ஸல் போன்ற பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
"இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது" என்று முன்பு ஒருமுறை ஸ்பீல்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
- உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
- இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது.
இங்கிலாந்து கடற்கரையில் நடந்து சென்ற போது, மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நியூ யார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள தகவல்களில் கடந்த மார்ச் 10ம் தேதி பவுலா மற்று்ம டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு தேவதை போன்ற எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். புகைப்படங்களின் படி மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினம் காணப்படுகிறது. இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

"இது என்னவென்று என்னால் சொல்ல முடியாது. அது மிகவும் விசித்திரமான விஷயம்," என்று பவுலா ரீகன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடற்பகுதிகளில் விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷிய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்தார். இது சமூக ஊடகங்களில் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
- ஏலியன் போல காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக காதுகளையும், மூக்கு துவார பகுதிகளையும், மேல் உதட்டையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.
- தனது உடலின் பல மாற்றங்களை செய்வதற்காக மட்டும் 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம்) செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இயற்கையின் படைப்பில் பெரும்பாலானோர் இயல்பான தோற்றமுடையவர்களாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் வித்தியாசமாக காணப்படுவார்கள். அதனால் தான் அழகு சாதன பொருட்கள் மூலமும், சிலர் அறுவை சிகிச்சை மூலமும் தங்களை அழகானவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் அந்தோணி லோப்ரெடோ என்பவர் தன்னை கருப்பு ஏலியன் போல மாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அதில் அந்தோணி தனது உடலை அறுவை சிகிச்சை செய்திருப்பது தெரிகிறது. அதாவது ஏலியன் போல காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது காதுகளையும், மூக்கு துவார பகுதிகளையும், மேல் உதட்டையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார். அதோடு தனது கண் விழித்திரையின் நிறத்தையும் மாற்றியுள்ளார். இதுபோன்று தனது உடலின் பல மாற்றங்களை செய்வதற்காக மட்டும் அவர் 30 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம்) செலவு செய்ததாக கூறப்படுகிறது.
- மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்ப பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் அறிந்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது.
- கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன.
உலகில் முதல் உயிர் என்பது முதலில் கடலில் தோன்றியதாக கருதப்படுகிறது. பூமியின் 71 சதவீத இடத்தை ஆக்கிரமித்திருக்கும் நீர் பலட்சக் கணக்கான வித்தியாச வித்தியாசமான உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. ஆழ்கடலுக்குள் ஒளிந்திருக்கும் எண்ணிலடங்கா அதிசயங்கள் நம்மை வகையில் அவ்வபோது கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்படும் விநோதமான உயிரினங்கள் மனிதன் இயற்கையை குறித்து அறிந்தது சொற்பமே என்று புலப்படுத்துகிறது. தற்போது பசிபிக் பெருங்கடலில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உயிரினம் மனிதர்களால் வர்ணிக்கப்படும் ஏலியன் போன்ற தோற்றத்தில் உள்ளது அறிவியல் உலகில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

மெக்சிகோவிற்கும் ஹவாய் தீவிற்கும் இடைப்ப பசிபிக் கடல் பிரதேசத்தில் இதற்கு முன் யாரும் பார்த்திராத இந்த வினோத உயிரினம் வாழ்கிறது. கடலின் 11,480 முதல் 18,045 அடியாழத்தில் அபிசோபெலாஜிக் என்று அழைக்கப்படும் கடல் மட்டத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினமானது கண்ணாடியின் தன்மையுடைய கடல் குக்கும்பர் என்று ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இதற்கு 'Unicumber' என்று பெயர் சூட்டபட்டுள்ளது . இந்த உயிரினம் மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்டுள்ளது. கடலின் தரைமட்டத்தில் உள்ள இயற்க்கைக் குப்பைகளை உண்டு இவை உயிர்வாழ்கின்றன. அதாவது இவை கடலின் வேக்கும் கிளீனர் போல் செயல்படுகின்றன. இதுமட்டுமின்றி கடல் பன்றி என்று குறிப்பிடப்படும் ஒரு உயிரினமும் அப்பகுதியில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சி செய்து வரும் ஆய்வாளர்கள், பசிபிக் கடல் பிரதேசத்தின் அடியாழத்தில் வாழும் 10 இல் 9 உயிரினங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.







