என் மலர்
உலகம்

சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை: இங்கிலாந்து பிரதமர்
- சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
- இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.
லண்டன்:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.






