என் மலர்tooltip icon

    இந்தியா

    போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை- பிரியங்கா காந்தி
    X

    போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை- பிரியங்கா காந்தி

    • இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை.
    • குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசவில்லை என்று கூறினார்.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    அவர் திட்டவட்டமாக கூறாத சில விசயங்கள் உள்ளன. அவர் சில குறிப்புகளை சொன்னார். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பேசவில்லை என்று கூறினார். ஆனால் அமெரிக்கா தலையிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. இது சுவாரஸ்யமானது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் 3ஆவது நாடு மத்தியஸ்தரராக செயல்படவில்லை என்று இந்தியா கூறியது. அதேவேளையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை, வர்த்தகம் மூலமாக முடிவுக்கு கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×