என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா"

    • அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
    • கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.

    இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கருதுகிறார். எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.

    இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

    • தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடக்கிறது.
    • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பியாங்காங்:

    உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் புகார் அளித்துள்ளது.

    • வடகொரிய மக்களின் வாழ்க்கை நிலை வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே உள்ளது.
    • வடகொரியாவின் அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தன்னந்தனியாக தனக்கென தனித்த சட்டதிட்டங்களுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ள நாடு வட கொரியா. கடந்த நூற்றாண்டு தொட்டு ஒற்றைக் குடும்ப ஆட்சியின் கீழ் வட கொரியா இயங்கி வருகிறது. அதன் தற்போதைய அதிபராக கிட்டத்தட்ட மன்னராகவே கிம் ஜாங் உன் உள்ளார்.

    வடகொரியாவின் மக்களின் வாழ்க்கை நிலை குறித்து வெளியுலகிற்கு இன்னும் புதிரானதாகவே இருந்து வருகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்நாளை கடத்தவே மிகவும் சிரமப்படுகின்றனர் என்பது தென் கொரியா மற்றும் பிற உலக நாடுகளின் கூற்று.

    இந்நிலையில், Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரிய அரசு தடை விதித்துள்ளது.

    சொற்கள் பயன்பாட்டில் மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியாவின் தாக்கத்தைத் தவிர்த்து, அதற்கு இணையான அரசு அங்கீகரித்த சொற்களை பயன்படுத்த சுற்றுலாத் தலங்களுக்கு வடகொரியா உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதனையடுத்து சுற்றுலா தலங்களில் வேலை பார்க்கும் வழிகாட்டிகள் 3 மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா வழிகாட்டிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பேசும்போது கூட ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
    • இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    பியாங்காங்:

    வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படையினர் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த தீவிர போர் பயிற்சியில் முத்தரப்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரிய தீபகற்ப கடலில் நடைபெறவுள்ள இந்த ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆன கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்த ராணுவ பயிற்சி பொறுப்பற்ற அதிகாரங்களில் கூட்டணியால் நடத்தப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.

    • கிம் ஜாங் உன் கடைசியாக 2023ஆம் ஆண்டு ரஷியா சென்றிருந்தார்.
    • 2019ஆம் ஆண்டுக்குப்பின் தற்போது சீனா சென்றடைந்துள்ளார்.

    வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இவரது தலைமையில் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார். அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.

    அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வெளியில் காண்பது அரிதாகும். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் அரிது. ரஷியா அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு மட்டும் எப்போதாவது சுற்றுப் பயணம் மேற்கொள்வது உண்டு.

    இந்த நிலையில் இன்று கிம்ஜாங் உன் சீனா சென்றடைந்துள்ளார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்டு இன்று சீனா சென்றடைந்துள்ளார். குண்டு துளைக்காத பிரத்யேக ரெயில் மூலம் சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் ராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.

    2023ஆம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து, புதினை சந்தித்து பேசினார். அதன்பின் இதுதான் அவருடைய வெளிநாட்டு பயணம். இதற்கு முன்னதாக 2019-ல் கிம் ஜாங் உன் சீனா சென்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதுடன், வீரர்களும் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.

    இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்களுக்கு சிறந்த போர் திறனும், தனித்துவமான தொழில்நுட்பமும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்த இரு வகையான ஆயுதங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், டிரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட வெவ்வேறு வான் இலக்குகளை அழிப்பதற்கு மிகவும் உகந்தவை என்றும் தெரிவித்துள்ளது.

    • உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.
    • ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    மாஸ்கோ:

    உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இரு தரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் இறக்கி சண்டையிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் அரசுமுறை பயணமாக வடகொரியாவுக்கு இன்று செல்கிறார். 3 நாட்கள் பயணமாக இதில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னைச் சந்தித்து ராணுவ உதவிகளைக் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • சியோனிஸ்டுகளும், பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழுப் பொறுப்பாவார்கள்.
    • ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.

    இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.

    மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வட கொரியாவின் அரசு ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.

    "இன்று உலகம் காணும் நிகழ்வுகள், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இஸ்ரேல், இஸ்ரேல் மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய்.. ஈரானுக்கு வட கொரியா ஆதரவு என்பதையும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி என்பதையும் தெளிவாக நிரூபிக்கிறது" என்று அந்த அதிகாரி கூறியதாக KCNA தெரிவித்துள்ளது.

    "மத்திய ஆசியாவில் ஒரு புதிய போரை கொண்டு வந்த சியோனிஸ்டுகளும், அவர்களை ஆர்வத்துடன் பாதுகாத்து ஆதரிக்கும் பின்கதவு சக்திகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதற்கு முழுப் பொறுப்பாவார்கள் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

    இஸ்ரேலுக்கு எதிரான வடகொரியாவின் அறிக்கை, ஈரானுடனான அதன் நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது. ஈரானும் வடகொரியாவும் 1973 முதல் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன.

    ஈரானை போல வடகொரியாவும் அதன் ஆயுதங்கள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் காரணமாக அமெரிக்கா மேற்கு நாடுகளால் தொடர்ந்து தடைகளுக்கு இலக்காகி வரும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

    • லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
    • 2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.

    தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி திடீரென்று அவசர ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.

    இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சட்டத்தை திரும்ப பெற்றார். இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தற்காலிக அதிபராக ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே தென் கொரியாவில் ஜூன் 3-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வேட்பாளர் லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதன்மூலம் அவர் தென் கொரியாவின் புதிய அதிபர் ஆகிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக மக்கள் கட்சி தலைவர் கிம் மூன் சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    இதற்கிடையில் புதிய அதிபராக நேற்று பதவியேற்ற லீ ஜே மியூங்க், நீண்ட கால பகையாளி ஆன வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விழைந்துள்ளார்.

    வெற்றிபெற்ற பின்பு பேசிய மியூங்க், "வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதியளித்தார்.

    61 வயது வழக்கறிஞரான லீ ஜே மியூங்க், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சியோங்னாமின் மேயராக எட்டு ஆண்டுகளும், கியோங்கி மாகாணத்தின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

    2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக்-இயோலிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

    2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.

    இராணுவச் சட்ட நெருக்கடியின்போது, லீ ஜே-மியுங் உட்படப் பல அரசியல்வாதிகள் தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

    அப்போது, அவர் தேசிய சட்டமன்றத்தின் சுவர்களில் ஏற முயன்ற காட்சி வைரலானது, மேலும் அதைத் தொடர்ந்து இராணுவச் சட்டம் நீக்கப்பட்டது.

    • ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
    • ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

    அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த சண்டையில் ரஷியா, வடகொரியா வீரர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.

    இந்த நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோஸ் கூறியதாவது,

    வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போரில் ரஷியாவுக்கு உதவிக்கரம் நீட்டியதற்காக வட கொரியாவுக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போராடிய வட கொரிய வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை புதின் பாராட்டியுள்ளார்.

    அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், "ரஷிய மக்கள் வட கொரிய சிறப்புப் படைகளின் வீரத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

    ரஷியாவிற்காக, நமது பொதுவான சுதந்திரத்திற்காக, தங்கள் ரஷிய சகோதரர்களுடன் ஆயுதமேந்திய நிலையில் போராடி தங்கள் உயிரைக் கொடுத்த மாவீரர்களை நாங்கள் எப்போதும் கௌரவிப்போம்" என்று புதின் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.
    • வட கொரிய அதிபருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன் என தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், வடகொரிய அதிபர் குறித்து அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை பல முறை சந்தித்து உச்சி மாநாடு நடத்தியுள்ளேன்.

    வட கொரியா அணு சக்தியை கொண்ட நாடு தான். அவருடன் இன்று வரை நல்ல நட்புறவில் உள்ளேன்.

    வடகொரியாவிடம் நிறைய அணு ஆயுதங்கள் உள்ளது போன்றே, பிற நாடுகளிடமும் உள்ளது.

    இருப்பினும் வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கையைக் குறைக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என கருதுகிறேன் என தெரிவித்தார்.

    • ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது.
    • வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் இல்லை.

    ×