search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ballistic missile"

    • இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் என ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
    • சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.

    இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.

    அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    "சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்" என ஈரான் மந்திரி தெரிவித்தார்.

    அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது.
    • இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது.

    இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.

    இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஈரான் நேரடியாக டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரான்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் ஏற்கனவே வான் எல்லைகளில் எதிரி ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்ததால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்தது.

    இதனால் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இஸ்ரேல் சிறப்பாக எதிர்கொண்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தாங்கள் உதவியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரானின் 80 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ஈரான் மற்றும் ஏமனில் இருந்து ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80-க்கும் மேற்பட்ட ஒரு வழி தாக்குதல் ஆளில்ல ஏரியல் வாகனங்கள் (OWA UAV) ஆகிய தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    மேலும், ஈரானின் தொடர்ச்சியான இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையிலான, மோசமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

    • 2022-ல் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை செலுத்தியுள்ளது
    • ரஷியாவுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்ட வாய்ப்பு

    தனது நாட்டிற்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அப்போதெல்லாம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அணுஆயுத கப்பல் தென்கொரிய கடற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி எச்சரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கடற்கரையில் ஏவுகணை செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவர் புதினை சந்திக்க இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு, வடகொரியா ஆயுதம் வழங்கினால் அது எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றும் கதையாக அமைந்து விடும் என உலக நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, ரஷியா- உக்ரைன் போர் மீது உலகத் தலைவர்கள் கவனம் திரும்பிய நிலையில், கடந்த ஆண்டில் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது.
    • அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.

    டோக்கியோ:

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.

    இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார் நிலையில் இருப்பது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • வடகொரியா ஒரு வாரத்தில் 4-வது முறையாக நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • இதற்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    வாஷிங்டன்:

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நேற்று வரையில் 3 முறை மொத்தம் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதித்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

    வடகொரியா இப்படி தனது அடாவடி போக்கை தொடர்ந்தால் அந்த நாடு மிகவும் பயங்கரமான பதிலடியை எதிர்கொள்ளும் என தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் எச்சரித்துள்ளார்.

    இதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் கட்டளை பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் சட்ட விரோதமான பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் நிலையற்ற தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. வடகொரியா அணு ஆயுத சோதனைக்கு முற்பட்டால் அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான பதிலடியை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.

    ×