என் மலர்
ஜப்பான்
- ஜப்பானில் பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
- சனே தகைச்சிக்கு மக்களிடையே 70 சதவீதம் ஆதரவு உள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் பிரதமராக சனே டகாய்ச்சி கடந்த அக்டோபரில் பதவியேற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் என பிரதமர் சனே டகாய்ச்சி உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டகாய்ச்சி பிறப்பித்தார். அங்கு பிப்ரவரி 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
- துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022-ம் ஆண்டு நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
அப்போது டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
- பிப்ரவரி 8, 2026 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
- சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
- நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலையில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கணிசமான அளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
- மிஷிமா நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
- இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிஷிமா நகரம் உள்ளது. இந்நகரத்தில் வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர் நேற்று மாலை தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய ஊழியரை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவாட் ஆகிய மாகாணங்களில் கடந்த 8-ந்தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுனாமி அலைகளும் தாக்கின.
இந்த நிலையில் ஜப்பானின் வடகிழக்கில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தீவான ஹோன்ஷு வின் வடக்கே உள்ள அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நிலநடுக்கம் உண்டானது.
இது ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவானது 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பசிபிக் கடற்கரையான ஹொக்கைடோ, அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களில் 3.2 அடி வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்டு உள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
- மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
டோக்கியோ:
ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் சகனோஸ்கி நகரம் உள்ளது. கடற்கரை நகரமான இங்கிருந்து பிடிக்கப்படும் சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்காக துறைமுகம் அமைத்தும், மீன்களை உறைய வைக்க, பதப்படுத்த கிடங்குகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த துறைமுகத்தில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீ, மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாகப் பரவி அருகே உள்ள மீனவர்களின் வீடுகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் வந்து தீயை அணைக்க போராடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு துறைமுகத்தில் பரவிய தீ அணைக்கப்பட்டது.
இந்த தீவிபத்தில் 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், உலகின் 13ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷியோடோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை லக்ஷயா சென் 21-14 என வென்றார்..
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜப்பான் வீரர் நிஷியோடா 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.
- குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில் லக்ஷயா சென் சிங்கப்பூரில் லோ கீன் யூ உடன் மோத உள்ளார்.
- தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது.
- மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசினார். அப்போது, தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது
ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
- குமாமாடோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.






