search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "japan ex PM"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்.
    • அபேவுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

    மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அபேவுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் உடல் டோக்கியோவை வந்தடைந்துள்ளது.

    டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார். அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.





    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷின்சோ அபேவுக்கு எங்களின் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக, 9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்.
    • இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவதில் எப்போதும் ஆர்வமுள்ளவர்.

    ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

    மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

    ஜப்பானின் முன்னாள் பிரதமர் மர்மநபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த நாடாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

    ஷின்சோ அபே உடனான எனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முந்தையது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். நான் பிரதமரான பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் பற்றிய அவரது கூர்மையான நுண்ணறிவு எப்போதும் எனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் நான் ஜப்பான் சென்றிருந்தபோது, ​​மீண்டும் அபேவைச் சந்தித்துப் பல விஷயங்கள் குறித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் எப்போதும் போல் புத்திசாலித்தனமாகவும் நுண்ணறிவுடனும் இருந்தார். இது எங்கள் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் ஜப்பானிய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியா-ஜப்பான் உறவுகளை ஒரு சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தார். இன்று, முழு இந்தியாவும் ஜப்பானுடன் வருந்துகிறது. இந்த கடினமான தருணத்தில் எங்கள் ஜப்பானிய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.

    முன்னாள் பிரதம மந்திரி ஷின்சோ அபேவுக்கு அளிக்கும் ஆழ்ந்த மரியாதையின் அடையாளமாக, 9 ஜூலை 2022 அன்று ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்.

    டோக்கியோவில் எனது அன்பான நண்பரான ஷின்சோ அபேவுடன் நான் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து ஒரு படத்தைப் பகிர்கிறேன். இந்தியா-ஜப்பான் உறவுகளை வலுப்படுத்துவதில் எப்போதும் ஆர்வமுள்ள அவர், ஜப்பான்-இந்தியா சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×