என் மலர்

  நீங்கள் தேடியது "Shinzo Abe"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஜூலை 8-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டின் அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது.

  புதுடெல்லி:

  ஜப்பான் நாட்டின் பிரதமரான ஷின்சோ அபே (67), நரா என்ற இடத்தில் ஜூலை மாதம் 8-ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது. ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ம் தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

  இதற்கிடையே, ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி அந்நாட்டு அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது.

  இந்நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
  • டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  டோக்கியோ :

  ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவரான முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜப்பான் மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் ஷின்ஜோ அபேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

  இந்த நிலையில் ஜப்பானில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கு வருகிற 27-ந்தேதி அரசு சார்பில் நினைவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

  இந்த நிலையில் ஷின்ஜோ அபேவுக்கு அரசு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஜப்பானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நினைவு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று தலைநகர் டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரசை கண்டிக்கும் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஷின்ஜோ அபேவுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். ஷின்ஜோ அபேயும், அவரது அரசும் குறிப்பிட்ட ஒரு மத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷின்ஜோ அபேவுக்கு நினைவு நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து 70 வயது முதியவர் ஒருவர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்தது நினைவுகூரத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார்.
  • ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது.

  டோக்கியோ:

  ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியபோது சுட்டு கொல்லப்பட்டார்.

  ஜப்பானின் கிழக்கு நகரமான நாராவில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேச தொடங்கியதும் அவர் சுடப்பட்டார். வீடியோ காட்சிகளில் ஷின்சோ அபேயின் பின்புறம் அப்பாவி போல நின்ற வாலிபர் துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது.

  அவரை பாதுகாப்பு வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். விசாரணையில் அவர் டெட்சுயா யமகாமி (வயது 41) ஜப்பான் கடல் சார் தற்காப்பு படை என்ற கடற்படை பிரிவில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன்விபரம் வருமாறு:-

  தேர்தல் பிரசாரத்துக்கு ஷின்சோ அபே கிழக்கு ஜப்பானின் நாரா நகருக்கு வர இருப்பது ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. இதனை கொலையாளி டெட்சுயா யமகாமி பார்த்துள்ளார்.

  அதில் ஷின்சோ அபே நாராவில் எங்கெங்கு பேசுகிறார் என்பதை கண்டுபிடித்த டெட்சுயா யமகாமி, அந்த பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளை குறிப்பெடுத்துள்ளார்.

  இதில் நாரா பகுதியில் நடக்கும் தெருமுனை கூட்டத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட கொலையாளி டெட்சுயா யமகாமி, அந்த பகுதியில் ஷின்சோ அபேயை சுட்டு கொல்ல முடிவு செய்துள்ளார்.

  இதற்காக அவரே வீட்டில் சுயமாக இரட்டை குழல் துப்பாக்கியை தயாரித்து உள்ளார். அந்த துப்பாக்கியை தனது சட்டையில் மறைத்து வைத்தபடி கூட்டத்துக்கு சென்றுள்ளார்

  கூட்டத்தில் ஷின்சோ அபே பேச தொடங்கிய சில நிமிடங்களில் டெட்சுயா யமகாமி அவரை துப்பாக்கியால் சுட்டார். 2 முறை சுட்டதில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

  ஷின்சோ அபேயின் கழுத்தில் வலது பகுதி மற்றும் வலது இதயப்பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது. அவரை பாதுகாவலர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 100 யூனிட் ரத்தம் கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக இறந்தார்.

  ஷின்சோ அபேயை கொன்றது ஏன்? என்பது பற்றி கொலையாளி டெட்சுயா யமகாமி கூறும்போது, ஷின்சோ அபேயின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அவர் மீது அரசியலுக்கு தொடர்பில்லாத பல புகார்கள் இருந்தன.

  அவர் பலமுறை இதுபோன்ற தவறுகளை செய்திருந்தார். இதற்காக அவரை கொல்ல முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக ஜப்பான் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்.
  • அபேவுக்கான பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

  மேற்கு ஜப்பான் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஜப்பான் கடற்படையின் முன்னாள் உறுப்பினரான கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி பயன்படுத்திய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அபேவுக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

  இந்நிலையில், முன்னாள் பிரதமரின் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கும் நிலையில் அபேவின் உடல் டோக்கியோவை வந்தடைந்துள்ளது.

  டோக்கியோவின் மேல்தட்டு குடியிருப்புப் பகுதியான ஷிபுயாவில் உள்ள அவரது வீட்டிற்கு அபேயின் உடலைச் சுமந்துகொண்டு ஒரு கருப்பு சவக்கரி வாகனம் வந்தது. வாகனத்தில் அவரது மனைவி அகி உடன் இருந்தார். அங்கு காத்திருந்த பலர் வாகனம் கடந்து செல்லும்போது தலையைத் தாழ்த்திக் கொண்டு மரியாதை செலுத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2020ம் ஆண்டு உடல்நல குறைவை காரணம் காட்டி ஷின்ஜோ அபே பதவி விலகினார்.
  • ஜப்பான் பாராளுமன்ற மேல்சபைக்கு நாளை (10ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

  டோக்கியோ

  ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்ததுடன், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, அவர் உடல்நல குறைவை காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார்.

  இந்த நிலையில், ஜப்பான் பாராளுமன்ற மேல்சபைக்கு நாளை (10ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது.

  அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

  ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் பைடன் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார்.

  ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் குவாட் சந்திப்புகளை பற்றிய, முன்னாள் பிரதமர் அபேவின் திறந்த மற்றும் வெளிப்படை தன்மை வாய்ந்த நீடித்த மரபு சார்ந்த பார்வையின் முக்கியத்துவம் பற்றியும் பைடன் குறிப்பிட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா இரங்கல் தெரிவித்தார்.
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

  டோக்கியோ:

  ஜப்பானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

  இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் பியுமியா கிஷிடா கூறுகையில், ஷின்சோ அபேவை காப்பாற்ற டாக்டர்கள் செய்த முயற்சி பலனளிக்கவில்லை. அவர்மீது நடந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் காட்டுமிராண்டிதனமான செயல். ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

  ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் அடைந்தது கடும் வேதனை அளிக்கிறது. இந்தியா, ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் ஷின்சோ அபேவின் பங்கு அளப்பரியது. இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். ஜப்பான் மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  எனது நண்பர் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம் குறித்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் ஷின்சோ அபே மறைவுக்கு திபெத்திய தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • ஜப்பானில் நீண்ட காலம் தலைமை பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே.

  டோக்கியோ:

  ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (வயது 67) தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு நாரா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

  மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்த அவரை, பாதுகாவலர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். உடனடியாக ஹெலிகாப்டரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூச்சுவிடவில்லை, இதயம் செயல்படவில்லை. எனவே, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

  ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. 2020 ஆம் ஆண்டில் உடல்நல பிரச்சனை காரணமாக பதவி விலகினார். அதுவரை பதவியில் இருந்தார். 

  துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபை இன்று சந்தித்தார். இருநாட்டு இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.#Modi
  புதுடெல்லி:

  இந்தியா - ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார்.

  அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

  இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-ஐ பிரதமர் மோடி  சந்தித்து பேசினார். இந்த தகவலை பிரதமர் மோடியின் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் ‘‘பிரதமர் மோடி- ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே யமனஷியில் சந்தித்தார்கள். இன்று முழுவதுமான அவர்களிடையிலான பேச்சுவார்த்தை இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கும்’’ என்று பதிவிட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜப்பான் ஆளுங்கட்சி தலைவராக பிரதமர் ஷின்சோ அபே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன்மூலம், அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். #JapanPM #ShinzoAbe
  டோக்கியோ:

  ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே (வயது 63) கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

  இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக முடிவு செய்த அபே, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதற்கான வேலைகளை தொடங்கினார். இந்நிலையில், கட்சியின் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அபே மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஷிகேரு இஷிபா களமிறங்கினார்.


  தேர்தல் முடிவில், ஷின்சோ அபே வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்பிக்கள், உறுப்பினர்கள் என மொத்தம் 553 பேர் வாக்களித்தனர். ஷிகேரு இஷிபா 254 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ஷின்சோ அபே மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். இதற்காக அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

  இதன்மூலம் நீண்டகாலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை ஷின்சோ அபே பெறுவார். இதற்கு முன்பு டாரோ கத்சுரா 1901 முதல் 1913 வரை மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #JapanPM #ShinzoAbe
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2012-ம் ஆண்டு முதல் ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Japan #ShinzoAbe
  டோக்கியோ:

  ஜப்பான் பிரதமராக உள்ள ஷின்சோ அபே கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். முன்னதாக, 2009-10 ஆண்டில் அவர் பிரதமராக இருந்துள்ளார். தற்போது அவர் சார்ந்த ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி அந்நாட்டு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் உள்ளது.

  இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் பிரதமராக விருப்பப்பட்டுள்ள அபே, தற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். வரும் 20-ம் தேதி கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அபேவின் போட்டியாளரும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியுமான ஷிகேரு இஷிபா களமிறங்க உள்ளார்.

  கட்சியில் 70 சதவிகித ஆதரவு அபேவுக்கு இருக்கும் காரணத்தால் அவர் எளிதாக வெற்றி பெருவார் என கூறப்படுகிறது. அப்படி வெற்றி பெரும் பட்சத்தில், அந்நாட்டு அரசியல் சாசனத்தை திருத்தம் செய்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்ப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாட்டு ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்துள்ளார். #ShinzoAbe #AlinaZagitova
  மாஸ்கோ :

  2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியாவில் நடைபெற்றது. இதில் ரஷியாவை சேர்ந்த அலினா சகிடோவா(16) என்ற பெண் பனிசறுக்கு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 

  ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக ஜப்பானில் பயிற்சி பெற சென்றார். அப்போது ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிடா இன நாய்களால் கவரப்பட்ட அலினா சகிடோவா தான் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அந்த நாயை தனக்கு பரிசளிக்க வேண்டும் என அவரது பெற்றோரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.  இந்நிலையில், ரஷியாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ள ஜாப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவரது மனைவியுடன் இணைந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மசறு என பெயறிடப்பட்ட மூன்று மாத அகிடா இன நாய்க்குட்டியை அலினா சகிடோவாவிற்கு பரிசளித்துள்ளார். #ShinzoAbe #AlinaZagitova
  ×