என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumamoto Masters badminton"

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வி அடைந்தார்.

    டோக்கியோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், உலகின் 13ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷியோடோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜப்பான் வீரர் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை லக்ஷயா சென் 21-14 என வென்றார்..

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜப்பான் வீரர் நிஷியோடா 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காலிறுதி சுற்றில் இந்திய வீரர் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
    • இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், முன்னாள் சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தில் தனது முதல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-13, 21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் லக்ஷயா சென் சிங்கப்பூரில் லோ கீன் யூ உடன் மோத உள்ளார்.

    • குமாமாடோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி விளையாடினர்.

    குமாமோட்டோ:

    குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 16-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயியின் ஹூயின் ஹூய்-லின் ஜிக் யுன் இணையிடம் தோற்று நடையை கட்டியது.

    இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.

    ×