என் மலர்
விளையாட்டு

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் வெற்றி
- குமாமாடோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கோகி வடனாபே உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
Next Story






