என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanae Takaichi"

    • பிப்ரவரி 8, 2026 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
    • சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது.

    ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு  பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார். 

    கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சிக்கு மக்களிடையே 70% ஆதரவு உள்ளது. இவரே ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார். 

    பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மையே உள்ளது. தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    ஆனால், புதிய அரசு அமைந்த பிறகு உடனடியாக பட்ஜெட் நிறைவேற்றப்படும் எனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.   

    • 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
    • ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.

    ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்ற கீழவையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து மேலவையில் நடைபெறும் ஓட்டெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்தே, ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். இதன்மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெறுகிறார்.

    ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மடலாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×