தைவான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: சீனாவை எச்சரித்த ஜப்பான் பிரதமர்

தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
தைவான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்: சீனாவை எச்சரித்த ஜப்பான் பிரதமர்
Published on

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருநாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசினார். அப்போது, தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது

ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com