என் மலர்
நீங்கள் தேடியது "தைவான்"
- கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
- தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்தது.
பீஜிங்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
- தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.
தைபே:
தைவான் நாட்டில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கடற்கரை நகரான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
- 11.1 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல்.
- சீனாவை தூண்டும் எந்தவொரு செயலுக்கும் உறுதியா பதிலடி கொடுக்கப்படும் என சீனா உறுதி.
தைவானுக்கு 11.1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது சீனாவை ஆத்திரமூட்டச் செய்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா அதிரடி தடை விதித்துள்ளது.
அத்துடன் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தைவான் விவகாரத்தில் சீனாவை தூண்டிவிடும் எந்தவொரு முயற்சிக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
தைவான் சீனாவின் பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 அமெரிக்க ராணுவம் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் 10 சீனியர் நிர்வாகிகள் ஆகியோருக்கு தடை விதித்துள்ளது.
- தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலையிடுவதை சீனா எதிர்த்து வருகிறது.
- சீனாவின் அத்துமீறலை கண்காணித்து வருகிறோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
தைபே நகரம்:
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்து சென்றது.
ஆனால், தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
ஆனால் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தைவான் அதனை மறுத்து வருகிறது.
இதற்கிடையே தைவான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது.
இந்நிலையில், தைவான் கடற்பகுதியில் 11 போர்க்கப்பல் மற்றும் 7 விமானங்கள் தைவான் எல்லையைச் சுற்றி வளைத்தன.
சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
- தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருகிறது
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருவதால், 2027ம் ஆண்டுக்குள் தைவான் உயர்மட்ட போர் தயார்நிலையை அடையும் என்று அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அறிவித்துள்ளார்.
மேலும்,தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறிய லாய் சிங்-டே, ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
- தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஜப்பான் பிரதமர் எச்சரித்தார்
- ஜப்பானுக்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சீனா அறிவுறுத்தியது.
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், தைவான் விவகாரத்தில் ராணுவ தாக்குதல் நடத்த ஜப்பான் துணிந்தால், உறுதியான பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோவுக்கு சீனா கடிதம் எழுதியுள்ளது.
தைவானை கைப்பற்ற சீனா, ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றுவோம் என ஜப்பான் பிரதமர் தகைச்சி கூறியிருந்த நிலையில், அந்த கருத்துக்கள் ராணுவ அச்சுறுத்தலுக்கு சமம் என கவலை தெரிவித்து ஐநாவிடம் சீனா முறையீடு செய்துள்ளது.
- ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
- சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். ஜப்பான் பிரதமர் தசைச்சி பேச்சு இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
மேலும், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, ஜப்பான் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், ஜப்பான் பிரதமரின் பேச்சு சீனா-ஜப்பான் பரிமாற்றங்களுக்கான சூழலைக் கடுமையாக பாதிக்கும். ஜப்பானில் உள்ள சீன குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
- தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது.
- மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசினார். அப்போது, தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது
ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
- தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.
- 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.
தைவான் நாட்டில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.
இதையறிந்து கொண்டு வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு முறையும் விடுப்பு முடியும் சமயத்தில் விவாகரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து வந்துள்ளார்.
இதை கண்டுபிடித்த வங்கி, அவர் 5வது முறை அவர் கேட்ட விடுமுறை கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியர் சட்டப்படியே தான் செயல்பட்டதாக வழக்கு தொடர்ந்ததால் அதை ஏற்ற நீதிமன்றம், வங்கி நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
2021ல் நடந்த இச்சம்பவம், தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
- தைவானில் ரிக்டர் 6.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின.
தைபே:
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தைபே தலைநகரில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது.
- முதல் நாளில் இந்திய அணி 6 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
சீன தைபே:
நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது.
இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2-வது மற்றும் 3வது இடம் பிடித்துள்ளனர்.
பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனயாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜஸ் சிர்சே தங்கம் வென்றார்.
தைவான் தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 தங்கம் வென்று அசத்தியது.
- நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது
- பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தைவானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள யிலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தலைநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.






