என் மலர்
உலகம்

தைவான்: ஊதியத்துடன் கூடிய விடுப்புக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த நபர்
- தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.
- 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.
தைவான் நாட்டில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டு சட்டப்படி, திருமணமானால் 8 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு தரப்படும்.
இதையறிந்து கொண்டு வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு முறையும் விடுப்பு முடியும் சமயத்தில் விவாகரத்து செய்து, மீண்டும் திருமணம் செய்து வந்துள்ளார்.
இதை கண்டுபிடித்த வங்கி, அவர் 5வது முறை அவர் கேட்ட விடுமுறை கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. ஆனால் அந்த ஊழியர் சட்டப்படியே தான் செயல்பட்டதாக வழக்கு தொடர்ந்ததால் அதை ஏற்ற நீதிமன்றம், வங்கி நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
2021ல் நடந்த இச்சம்பவம், தற்போது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.






