தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு

நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததுபொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தைவானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
Published on

தைவானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள யிலனுக்கு தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் 69 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தலைநகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com