என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர்"

    • நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
    • அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என டிரம்ப் எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த மோதலில் 8 பேர் பலியானார்கள்.

    இதற்கிடையே அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோ சகர் அலி ஷாம்கானி கூறுகையில்," ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. இதை மீறி வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விஷயத்தில், பாதுகாப்பில் தலையிட நினைத்தால் அவர்களின் கை துண்டிக்கப்படும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்காவின் தலையீடு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.

    ஈரானின் தேசிய பாது காப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறும் போது,"ஈரானில் போராட் டங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டி விடு கின்றன. எங்களின் உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவது முழுப் பிராந்தியத்திலும் குழப்பத்திற்கும் அமெரிக்க நலன்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

    அதேபோல் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறும்போது, அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் படைகளும் சட்ட பூர்வமான இலக்குகளாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி, ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள சட்ட விரோத அச்சுறுத்தல்களை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கைகள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்றும் கூறி உள்ளார்.

    அந்தக் கடிதத்தில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் தற்காப்பு உரிமையை உறுதியாக பயன்படுத்தும் என்று கூறி உள்ளதாகத் தெரிகிறது.

    • ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    ப ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச சமாதான திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டார்.

    இந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில், NATO கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

    அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார். அதே நேரம் எந்த ஒரு நிலப் பகுதியை ரஷியாவுக்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுனார். 

    ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் முடிவால் ரஷியா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    • தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
    • தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருகிறது

    தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

    தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.

    இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருவதால், 2027ம் ஆண்டுக்குள் தைவான் உயர்மட்ட போர் தயார்நிலையை அடையும் என்று அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அறிவித்துள்ளார்.

    மேலும்,தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறிய லாய் சிங்-டே, ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
    • பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.

    2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.

    ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

    பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.

    பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.

    உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.

    பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.

    இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர். 

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • பணயக் கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்திக்கிறார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

    இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்" என்று தெரிவித்தார்.

    • ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.

    உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தம் நமது தேசிய பாதுகாப்புக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை ஆய்வு செய்கிறோம். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், அதை உறுதி செய்வதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது" என்று இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் சீனாவிற்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்தது. ஜெர்மனி, பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய புதின், "ரஷ்யா ஒரு நாள் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கும் என பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதை தான் எப்போதும் எதிர்த்ததில்லை" என்று தெரிவித்தார். 

    • உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார்.
    • உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக, சனிக்கிழமை அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை டிரம்ப் சந்தித்தார். இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடைபெற்றதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர். ஆனால் போர் நிறுத்தம் குறித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. போரை நிறுத்த புதின் பல நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்புக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

    இந்நிலையில், NATO-வில் உக்ரைன் உறுப்பினராக முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "ரஷ்யா கைப்பற்றியுள்ள க்ரிமியா பகுதியை உக்ரைன் உரிமை கொண்டாடக் கூடாது. NATO-வில் உக்ரைன் உறுப்பினராக முடியாது" என்று தெரிவித்தார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    • ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்
    • இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் எச்சரித்துள்ளார்.

    உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

    ரஷிய அதிபர் புதின் இன்று அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வர இந்தியா மீதான வரி விதிப்பும் முக்கிய காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×