என் மலர்
நீங்கள் தேடியது "மூன்றாம் உலகப்போர்"
- தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம்.
- எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அரசு ஊடகம் மூலம் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில்,
"அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது. எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம். அமெரிக்கா உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை இழந்துவிட்டது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். ஆனால், வடகொரியா அப்படிப்பட்டது அல்ல. எங்களது நட்பு நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.
டிரம்பின் இந்தச் செயல் உலகை மற்றுமொரு பேரழிவை நோக்கித் தள்ளுகிறது. மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை எதிர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த இலக்கு நீங்களாகக் கூட இருக்கலாம்.
டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். மதுரோவின் கைது என்பது ஒரு தனிமனிதனின் கைது அல்ல, அது உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
- பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
- பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும்.
2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை பேரிடர்கள், விபத்துகள், வர்த்தக போட்டிகள், போர்களால் நிறைந்துள்ளது. 2025 முடிவடைய இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், 2026-ல் நிலைமை மேம்படும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், பால்கெரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 2026 குறித்த அவரின் கணிப்பு விவாதப்போருளாகி வருகிறது.
பாபா வாங்கா கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டு நடப்பு ஆண்டை விட மிகவும் மோசமாக இருக்கலாம்.
உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும்.
பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்று பாபா வாங்கா எச்சரித்துள்ளார். அவர் கூறிய இந்தப் போரே மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
- மூன்றாம் உலகப் போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
- நான்காவது உலகப் போரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நான் ஒன்று சொல்ல முடியும் என்றார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒருமுறை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்டது:
"அணு ஆற்றலைக் கண்டுபிடித்த விஞ்ஞானியான நீங்கள், மூன்றாம் உலகப் போரில் என்ன நடக்கப் போகிறது என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.
ஐன்ஸ்டீன் கண்களில் கண்ணீர் பெருகியது.
"மூன்றாம் உலகப் போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நான் ஒன்று சொல்ல முடியும்" என்றார்.
கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர் மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். அப்படியானால் "நான்காம் உலகப் போரைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று உற்சாகமாகக் கேட்டார்.
ஐன்ஸ்டீன் சொன்னார், "அது பற்றி ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்ல முடியும். அது ஒருபோதும் நடக்காது"
மூன்றாம் உலகப் போர்தான் கடைசி உலகப் போராக இருக்கும். இந்த கடைசி உலகப் போருக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர்.
-ஓஷோ
- கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன்.
- சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்களின் கணிப்புகள் அப்படியே நடந்து வரும் நிலையில் அவர்களின் எதிர்கால கணிப்புகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால்குமார் என்பவர் மூன்றாம் உலகப்போரின் தொடக்கம் குறித்து கணித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நான் இந்து கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட வேத ஜோதிடத்தை வைத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறேன். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன். இப்போது இருக்கும் கிரக நிலையை வைத்து பார்க்கும் போது சில நாட்களில் மூன்றாம் உலகப்போர் தொடங்கலாம்.
ஜூன் 18-ந் தேதி (நேற்று) மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரகத்தூண்டுதல்களை கொண்டிருந்தது. இந்திய எல்லையில் 9 யாத்தீரிகள் கொல்லப்பட்டது மற்றும் வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்குள் நுழைவது, இஸ்ரேல், லெபனான், சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே குஷால்குமார் ஜூன் 10-ந் தேதி உலகப்போரின் தொடக்கமாக இருக்கும் என கணித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. என்றாலும் தற்போது மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் வருகிற 29-ந் தேதி மற்றொரு சாத்தியமான அழிவுநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.






