விரைவில் 3-ஆம் உலகப் போர் - பிரபல ஜோதிடர் கணிப்பு

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன்.சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.
விரைவில் 3-ஆம் உலகப் போர் - பிரபல ஜோதிடர் கணிப்பு
Published on

புதுடெல்லி:

பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்களின் கணிப்புகள் அப்படியே நடந்து வரும் நிலையில் அவர்களின் எதிர்கால கணிப்புகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் குஷால்குமார் என்பவர் மூன்றாம் உலகப்போரின் தொடக்கம் குறித்து கணித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நான் இந்து கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட வேத ஜோதிடத்தை வைத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறேன். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதை கணிக்கிறேன். இப்போது இருக்கும் கிரக நிலையை வைத்து பார்க்கும் போது சில நாட்களில் மூன்றாம் உலகப்போர் தொடங்கலாம்.

ஜூன் 18-ந் தேதி (நேற்று) மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரகத்தூண்டுதல்களை கொண்டிருந்தது. இந்திய எல்லையில் 9 யாத்தீரிகள் கொல்லப்பட்டது மற்றும் வடகொரிய வீரர்கள் தென்கொரியாவுக்குள் நுழைவது, இஸ்ரேல், லெபனான், சீனா, தைவான் இடையே பதட்டம் போன்றவை என் கணிப்புக்கு ஆதாரம் என அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே குஷால்குமார் ஜூன் 10-ந் தேதி உலகப்போரின் தொடக்கமாக இருக்கும் என கணித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. என்றாலும் தற்போது மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கு கிரக நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் வருகிற 29-ந் தேதி மற்றொரு சாத்தியமான அழிவுநாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com