தைவானில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.
தைவானில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

தைபே:

தைவான் நாட்டில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கடற்கரை நகரான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com