ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- மக்கள் பீதி

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- மக்கள் பீதி
Published on: 

ஜப்பானின் ஷிமானே மாகாணத்தில் இன்று அதிகாலையில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து கணிசமான அளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் டோஹோகு நகரில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

X

Maalai Malar
www.maalaimalar.com