என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணை சோதனை"

    • அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
    • கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

    எனவே பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா அவ்வப்போது கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.

    இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கருதுகிறார். எனவே இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியைக் கைவிட வேண்டும் என தென் கொரியாவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெக்சேத் தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இது வடகொரியாவின் கோபத்தை மேலும் தூண்டியது.

    இந்நிலையில், கிழக்கு கடற்பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

    • தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடக்கிறது.
    • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பியாங்காங்:

    உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் புகார் அளித்துள்ளது.

    • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.

    வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.

    இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்களுக்கு சிறந்த போர் திறனும், தனித்துவமான தொழில்நுட்பமும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்த இரு வகையான ஆயுதங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், டிரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட வெவ்வேறு வான் இலக்குகளை அழிப்பதற்கு மிகவும் உகந்தவை என்றும் தெரிவித்துள்ளது.

    • டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
    • அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

    ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த சோதனை நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடத்தப்பட்டது. டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை (Tyne-88 surface-to-shin short range missile) சோதனை செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் சீனாவில் போர் கப்பல் ஜப்பான் அருகில் உள்ள கடற்பரப்பில் காணப்பட்டதாக ஜப்பன் கவலை தெரிவித்திருந்தது. எனவே அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது. 

    புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஜப்பான் இதற்கு முன்பு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    • இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
    • 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களின்படி, பாகிஸ்தான் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தாக்கும் ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் என்று கூறப்படுகிறது.

    ஃபதே ஏவுகணை, ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், இதை விரைவாக ஏவ முடியும். இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது

    இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது ஏவுகணையை சோதிப்பது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் அது தரையிலிருந்து தரைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான ‘அப்தலி’யை பாகிஸ்தான் பரிசோதித்தது.
    • 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் பெற்ற இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கியதாக ராணுவம் கூறியுள்ளது.

    புதுடெல்லி:

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதை தணிப்பதற்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேநேரம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான 'அப்தலி'யை பாகிஸ்தான் பரிசோதித்தது. 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் பெற்ற இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கியதாக ராணுவம் கூறியுள்ளது.

    வீரர்களின் தயார் நிலையை உறுதி செய்யவும், தொழில்நுட்ப திறனை மதிப்பிடவும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள ராணுவம், 'சிந்து பயிற்சி'யின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

    பாகிஸ்தானின் இந்த ஏவுகணை பரிசோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. போர் பதற்றத்துக்கு மத்தியில் நடந்துள்ள இந்த பரிசோதனை அப்பட்டமான ஆத்திரமூட்டும் செயல் எனவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

    • இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி.
    • ராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    இந்த தரையில் இருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பெயர் அப்தாலி, இது பாகிஸ்தானால் சோன்மியானி ரேஞ்சில் சோதிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, அப்தாலி ஆயுத அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை, 'எக்சர்சைஸ் சிந்து' என்ற இராணுவப் பயிற்சியின் கீழ் சோதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் செய்தி தொடர்பு பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது.

    உலகளாவிய ஃபயர்பவர் தரவரிசையின்படி, இராணுவ சக்தி மற்றும் ஆயுத பலத்தின் அடிப்படையில் உலகின் 145 நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 12வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சோதனையில் ஈடுபட்டது.
    • தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் அரபிக்கடலில் நிலை நிறுத்தப்பட்டு உள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் சோதனையில் ஈடுபட்டது. இதை கடற்படை இன்று தெரிவித்தது. இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    போர் கப்பல்களில் இருந்து அச்சுறுத்தல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன. தொலை தூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன.

    நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம், எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடல் வழி தாக்குதல்களை எதிர்கொள்ளவும், சண்டையிடவும் கடற்படை தயார் நிலையில் இருப்பதை மேற்கண்ட ஒத்திகை வெளிக்காட்டுகிறது. 

    • ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    • இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.

    இந்நிலையில் இந்திய விமானப்படை நேற்று தீவிர போர்ப்பயிற்சியை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய செக்டாரில் ஒரு பரந்த பகுதியில் இந்த பயிற்சியும், ஒத்திகையும் நடந்துள்ளது. இந்த பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

    இதற்காக அரியானாவின் அம்பாலா மற்றும் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா விமானப்படை தளங்களில் இருந்து 2 ரபேல் விமான படைப்பிரிவுகள் பயிற்சித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    ரபேல் விமானங்கள் தரை இலக்குகளை துல்லியமாக தாக்குவது உள்ளிட்ட சிக்கலான பணிகளை கச்சிதமாக செய்து முடிப்பவை ஆகும். ஆனால் இது வழக்கமான பயிற்சிதான் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை சோதனை நடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இந்தியக் கடற்படை கூறியதாவது, 'ஏவுகணைகளை அழிக்கக்கூடிய திறன்கொண்ட உள்நாட்டு வழிகாட்டப்பட்ட ஐ.என்.எஸ். சூரத் எனும் போர்க்கப்பலானது தனது இலக்கைத் துல்லியமாக தகர்க்கும் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது கடற்படையின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 20 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை போன்ற அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க இந்தியா உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கராச்சி கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து போர்ப் பதற்றம் எழுந்துள்ளது. 

    • அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
    • டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி.

    விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

    ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    • வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை நடத்தியது.
    • வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் வரும் 31-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ம் தேதி வரை கொரிய எல்லையில் வான்வழி பயிற்சியில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வடகொரியா நேற்று குறுகிய தூரம் செல்லக்கூடிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள டோங்சோன் நகரில் இருந்து ஏவப்பட்ட 2 ஏவுகணைகளும் 24 கி.மீ உயரத்தில் 230 கி.மீ வரை பறந்து சென்று பின்னர் கடலில் விழுந்ததாக தென்கொரியா கூட்டுப்படைகளின் தலைவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ×