என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missile"

    • இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
    • நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

    ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.

    இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. 

    இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.

    ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

    அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த 'ராணுவ ஏவுகணை படை' என்ற தனி ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளார். .

    இந்தியா உடனான சமீபத்திய மோதலின் எதிரொலியால், ஏவுகணைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
    • சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிப்போம்

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் பேசிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், "சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டினால், அதனை 10 ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழிப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நீங்கள் நினைத்தால், பாதி உலகத்தையே எங்களுடன் அழைத்துச் சென்றுவிடுவோம்" என்று தெரிவித்தார்.

    இந்தியாவிற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் பகிரங்க மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அணு ஆயுதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம். இந்த கருத்துக்கள் நட்புரீதியான மூன்றாவது நாட்டின் மண்ணிலிருந்து கூறப்பட்டிருப்பதும் வருந்தத்தக்கது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைன் - ரஷியா இடையே அமைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
    • ரஷியா நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

    • இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.
    • ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து ஒரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.

    இந்நிலையில் சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா இந்த தாக்குதல்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போது தனது நாடு அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்றதாக சனாவுல்லா ஒப்புக்கொண்டார்.

    இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க தங்கள் ராணுவத்திற்கு 30 முதல் 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகவும், அதுதான் அவர்களின் தலைவிதியை தீர்மானித்ததாகவும் அவர் பாகிஸ்தான் செய்தி சேனலிடம் கூறினார்.

    "இந்தியா நூர் கான் விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையை ஏவியபோது, அதை பகுப்பாய்வு செய்ய நமது ராணுவத்திற்கு 30-45 வினாடிகள் மட்டுமே இருந்தன. இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

    அவர்கள் நம் தரப்பை தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அது உலகளாவிய அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும்" என்று சனாவுல்லா தெரிவித்தார்.

    ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    • சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
    • தற்போது, ​​ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

    பாகிஸ்தான் மிகவும் ரகசியமான முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தி ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளன.

    இந்த ஏவுகணைகள் 5,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உளவுத்துறை அமைப்பு அறிக்கையில், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்துர்'க்குப் பிறகு, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளை குறிவைக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ரகசியமாக உருவாக்கி வருகிறது.

    பாகிஸ்தான் இதுபோன்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கவோ அல்லது வாங்கவோ முயற்சித்தால், அந்த நாடு எதிரியாக இக்கருதப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்ததாக அறிக்கை கூறுகிறது.

    அமெரிக்கா, தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அல்லது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாட்டையும் அதன் எதிரியாக அறிவிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது. தற்போது, ரஷியா , சீனா மற்றும் வட கொரியாவை அமெரிக்கா தனது எதிரி நாடுகளாகக் கருதுகிறது.

    சிறிது காலமாக, பாகிஸ்தான் முக்கியமாக குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

    தற்போது அந்நாட்டிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM) இல்லை. 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தான், மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான இடைநிலை ஏவுகணையான ஷாஹீன்-III ஐயும், 2023 ஆம் ஆண்டில், இடைநிலை ஏவுகணையான கௌரியையும் வெற்றிகரமாக சோதித்தது.

    இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரின் போது 450 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு ஏவுகணையை (மேற்பரப்பில் இருந்து மேற்பரப்புக்கு தாக்கும் ஏவுகணை) சோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்தது.

    கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்தது. ஏவுகணைத் திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான தேசிய மேம்பாட்டு கழகம் மற்றும் மூன்று நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை அமெரிக்க நிறுவனங்கள் தடை செய்தது.

    பாகிஸ்தான் இத்தகைய ஏவுகணைகளை உருவாக்குவது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா பாரபட்சமாக தங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

    • ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.
    • IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது.

    இஸ்ரேலுடனான நடந்து வரும் போர் குறித்து ஈரான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    நேற்று முன் தினம் தாக்குதல்களில் இஸ்ரேலுக்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிக்கைப்படி, 11வது கட்ட தாக்குதல்கள் "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை "Fattah-1" பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

    "ஈரானியப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் வான்வெளியின் (இஸ்ரேல்) மீது முழு கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளன" என்று IRGC தெரிவித்துள்ளது.

    தற்போதைய மோதலில் ஈரான் இந்த வகை ஏவுகணையைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறை. அக்டோபர் 1, 2024 அன்று "ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2" இல் இஸ்ரேலுக்கு எதிராக Fattah-1 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்தது.

     ஈரான் தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான Fattah-1 ஐ 2023 இல் அறிமுகப்படுத்தியது.

    இஸ்ரேலின் இரும்பு டோம் போன்ற மிகவும் மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளைக் கூட தோற்கடிக்கும் வகையில் Fattah-1 வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    IRGC இதை "இஸ்ரேலிய-ஸ்ட்ரைக்கர்" என்று விவரிக்கிறது. இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

    இது திட எரிபொருளில் இயங்குகிறது மற்றும் 200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

    Fattah-1, மணிக்கு 17,900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனம் (HGV) முனையைக் கொண்டுள்ளது.

    இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் காற்றில் இருக்கும்போது அவற்றின் பாதையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன.

    இந்த தனித்துவமான திறன் அவற்றைக் கண்டறிந்து இடைமறிப்பதை கடினமாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கின்றன, இது மணிக்கு தோராயமாக 6,100 கிலோமீட்டர் ஆகும். 

    • 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்.
    • கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் தலைநகர் கீவ் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 116 பேர் காயம் அடைந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    கீவ் நகர் மீது இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 மாடி கட்டிடம், 25-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்ததாக கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்து்ளளார். கீவ் மீது கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ரஷியாவும் உக்ரைனும் நேருக்குநேர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    கீவ் நகரை தவிர்த்து தெற்கு துறைமுக நகரான ஒடேசா மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழக்க, 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கீவ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், மிகவும் மோசமான தாக்குதலில் ஒன்று என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    ரஷியா 440 டிரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகள் மூலம் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

    • ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.
    • அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

    ஈரான் தனது அணுசக்தி அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரித்திருந்தார்.

    ஆனால் நேர்மாக ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.

    இன்று தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கை ஆட்டிப்படைக்க நினைக்கும் மேற்கு நாடுகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது. 

    • ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது.
    • வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்கா கூட்டு படையுடன் சேர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று வடகொரியா மீண்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்து உள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடல் பகுதியை நோக்கி சீறி பாய்ந்தது தெரியவந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதா?என்பது குறித்து தகவல் இல்லை.

    • அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

    அவ்வகையில், வடகொரியா இன்று கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து விரிவான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அமெரிக்க படைகளுடன் இணைந்து தென் கொரியா போர் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இன்று வட கொரிய-தென் கொரிய எல்லைக்கு அருகே மிகப்பெரிய அளவில் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    ×