என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா ஏவிய பிரமோஸ்.. அந்த 45 வினாடிகள்.. அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும் - பாகிஸ்தான்
    X

    இந்தியா ஏவிய பிரமோஸ்.. அந்த 45 வினாடிகள்.. அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும் - பாகிஸ்தான்

    • இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.
    • ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து ஒரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    இந்த மோதலின்போது பாகிஸ்தான் மீது இந்தியா சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளை ஏவியது.

    இந்நிலையில் சமீபத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் ராணா சனாவுல்லா இந்த தாக்குதல்கள் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போது தனது நாடு அணு ஆயுதப் போரின் விளிம்பிற்குச் சென்றதாக சனாவுல்லா ஒப்புக்கொண்டார்.

    இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்தியிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க தங்கள் ராணுவத்திற்கு 30 முதல் 45 வினாடிகள் மட்டுமே இருந்ததாகவும், அதுதான் அவர்களின் தலைவிதியை தீர்மானித்ததாகவும் அவர் பாகிஸ்தான் செய்தி சேனலிடம் கூறினார்.

    "இந்தியா நூர் கான் விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணையை ஏவியபோது, அதை பகுப்பாய்வு செய்ய நமது ராணுவத்திற்கு 30-45 வினாடிகள் மட்டுமே இருந்தன. இவ்வளவு குறுகிய காலத்தில் எடுக்கப்படும் எந்த முடிவும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

    அவர்கள் நம் தரப்பை தவறாகப் புரிந்துகொண்டிருந்தால், அது உலகளாவிய அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கும்" என்று சனாவுல்லா தெரிவித்தார்.

    ராவல்பிண்டியின் சக்லாலாவில் அமைந்துள்ள நூர் கான், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய தளமாகும்.

    Next Story
    ×