என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏவுகணை தாக்குதல்"

    • டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.
    • அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    ரஷிய படைகளைத் தாக்க நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட டொமாகாக் (Tomahawk) ஏவுகணைகளை உக்ரைன் கோரியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

    இது குறித்த இறுதி முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என்று துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

    டொமாகாக் ஏவுகணைகள் சுமார் 2,500 கி.மீ (1,550 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

    இவை உக்ரைனுக்கு வழங்கப்பட்டால், ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ கூட உக்ரைனின் தாக்குதல் வரம்பிற்குள் வரும்.

    முன்னதாக நீண்ட தூரத் தாக்குதல் ஏவுகணைகளை வழங்குவதை டிரம்ப் நிராகரித்திருந்தாலும், இப்போது அவர் அனுமதி வழங்கும் முடிவுக்கு தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது என அமெரிக்காவின் உக்ரைன் சிறப்புத் தூதர் கீத் கெல்லாக் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த ஆயுதங்கள் போர்க்களத்தின் நிலையை மாற்றாது என்று கூறினார். 

    • சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
    • நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.

    உக்ரைனில் ரஷிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

    செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷிய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.

    நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.  

    • கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
    • முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இதனால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின.

    • கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
    • சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.

     நேற்று (திங்கள்கிழமை முதல்) தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக குவைத் அறிவித்தது. குவைத் ஏர்வேஸ் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

    அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளி மூடலை அறிவித்தது.

    அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி கத்தாரும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.

    வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரான், ஈராக், சிரியா மற்றும் இஸ்ரேல் வான்வெளிகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.

    "சேஃப் ஏர்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் வர்த்தக விமானங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.

    • அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் என்று தெரிவித்தது.
    • ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

    ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை "அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்" என்று தெரிவித்தது.

    ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.

    • "ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF கூறியது.
    • ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன

    நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

    இதற்கிடையே, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பைக் காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டிருந்தன.

    "ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF இந்த வரைபடத்தை வெளியிட்டிருந்தது.

    அந்த வரைபடத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகவும், வடகிழக்கு இந்தியா நேபாளத்தின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    சமூக வலைத்தளங்களில் இந்தியப் பயனர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததையடுத்து, IDF வெளியிட்ட விளக்கத்தில், "இந்த வரைபடம் பிராந்தியத்தின் ஒரு விளக்கப் படம். இது எல்லைகளைத் துல்லியமாக சித்தரிக்கத் தவறிவிட்டது. இந்த படத்தால் ஏற்பட்ட எந்தத் தவறுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டது.

    இந்த வரைபடத்தில் ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன எனக் காட்டப்பட்டிருந்தது. 

    • இந்த கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸபிரேஷனாக கொண்டுள்ளது
    • நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க முடியும்.

    நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 175 பில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் டோம்" என்ற திட்டத்தை நேற்று அறிவித்தார்.

    இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்கா, ஆயுதங்களை விண்வெளியில் வைக்கும் என்றும், 2029 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவிக்காலம் முடியும்போது அவை முழுமையாக செயல்படும் என்றும் கூறினார்.

    இந்த கோல்டன் டோம் திட்டம் இஸ்ரேலின் அயன் டோம் திட்டத்தை இன்ஸபிரேஷனாக கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குவதை எதிர்த்து ஈரான், ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர் தாக்குதல்கள் நடக்கின்றன. அங்கிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்புகள் கொண்ட அமைப்பு "அயன் டோம்" என்று குறிப்பிடப்படுகின்றன. 

    • உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷியா 85 ஏவுகணைகளை வீசியது.
    • உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டு முக்கிய பகுதிகளில் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷிய படைகள் குறைந்த பட்சம் 85 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உக்ரைன் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்கியதில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். எனினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரஷிய ஏவுகணைத் தாக்குதல்கள் பழிவாங்கும் மற்றொரு முயற்சி என்றும், குளிர் காலத்திற்குள் உக்ரைன் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலைகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த ரஷியா முயற்சிக்கும் என்றும் உக்ரைன் மந்திரி ஹெர்மன் ஹலுஷெங்கோ குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசப்பட்ட ரஷிய ஏவுகணை ஒன்று தாக்கியதில் உக்ரைன் அண்டை நாடான மால்டோவா பாதிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து அந்நாட்டிற்கு செல்லும் முக்கிய மின்வழி தடம் இந்த தாக்குதலால் சேதம் அடைந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.

    இதனிடையே ரஷிய வீசிய ஏவுகணை ஒன்று குறி தவறி போலந்து நாட்டின் ப்ரெஸெவோடோவா கிராமத்தில் தானியங்களை உலர்த்தும் பகுதியை தாக்கியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    எனினும் ரஷிய ஏவுகணை தாக்குதல் குறித்து போலந்து அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தவில்லை. ஆனால் போலந்து உயர்மட்டத் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

    இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது குண்டுகளை வீசினர்.

    இதனால் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கோலன் குன்றுகளில் உள்ள ஒரு வயலில் விழுந்தது.

    இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.

    இதற்கிடையே மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்கள், வெடிபொருட்களை வீசிய பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
    • வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது. ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கின. மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    அவ்வகையில் நேற்று இரவு உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.

    கீவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம்.
    • ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகளின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்கட்டிடம் இடிந்து தீப்பிடித்து எரிந்தது. 3 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, "மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம். ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது தூய ரஷிய பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்கு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய போது அதன் 10 ஏவுகணைகள், 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் படைகள் ஜபோரிஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க்கில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தெற்கு உக்ரைனில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவின் மேஜர் ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு வலைத்தள பதிவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு உக்ரைனில் 35வது படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற செர்ஜி கோரியாச்சேவ், நேற்று தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சண்டையில்தான் உக்ரைன் தனது எதிர்தாக்குதல் மூலம் 4 கிராமங்களை விடுவித்துள்ளது.

    ராணுவ அதிகாரி கோரியாச்சேவ் இதற்கு முன்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா, மால்டோவாவில் அறிவிக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட பகுதி மற்றும் தஜிகிஸ்தானில் பணியாற்றியிருக்கிறார்.

    ×