search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனில் ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி
    X

    உக்ரைனில் ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல்- 2 பேர் பலி

    • மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம்.
    • ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகளின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்கட்டிடம் இடிந்து தீப்பிடித்து எரிந்தது. 3 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, "மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம். ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது தூய ரஷிய பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்கு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய போது அதன் 10 ஏவுகணைகள், 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×