என் மலர்
நீங்கள் தேடியது "விமானப்படை தளம்"
- கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
- சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
நேற்று (திங்கள்கிழமை முதல்) தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக குவைத் அறிவித்தது. குவைத் ஏர்வேஸ் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளி மூடலை அறிவித்தது.
அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி கத்தாரும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா மற்றும் இஸ்ரேல் வான்வெளிகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
"சேஃப் ஏர்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் வர்த்தக விமானங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
- நாடு இராணுவ ரீதியாக தயாராக உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இல்லை என்று கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தாரின் தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு இராணுவ தளங்களில் அல் உதெய்த் விமானத் தளமும் ஒன்றாகும், இது அபு நக்லா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது கத்தார் அமீரக விமானப்படை, அமெரிக்க விமானப்படை, ராயல் விமானப்படை மற்றும் பிற வெளிநாட்டுப் படைகளைக் கொண்டுள்ளது. இந்த தளத்தை குறிவைத்து நேற்று இரவு ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கத்தார் நேரப்படி திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தியது.
கத்தாரின் அல் உதெய்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக கத்தார் ஊடகங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி எக்ஸ் பதிவில், "இது கத்தார் அரசின் இறையாண்மை, அதன் வான்வெளி, சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அப்பட்டமான மீறல்" என்று கூறினார்.
"இந்த வெட்கக்கேடான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு சமமான முறையில் நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கத்தார் கொண்டுள்ளது" என்று தெரிவித்தார்.
கத்தார் வான் பாதுகாப்பு வெற்றிகரமாக தாக்குதலை முறியடித்தது மற்றும் ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்தது, காயங்கள் அல்லது மனித உயிரிழப்புகள் எதுவும் இல்லை என அல் அன்சாரி பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
- அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில் என்று தெரிவித்தது.
- ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று (திங்கள்கிழமை) இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கத்தார் தனது வான்வெளியை முன்னெச்சரிக்கையாக மூடிய சில நிமிடங்களில், தோஹா மற்றும் லுசைல் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் ஏவுகணைகள் சீறிப் பாய்ந்ததாகவும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் அரசு தொலைக்காட்சி, இத்தாக்குதலை "அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு ஈரானிய ஆயுதப் படைகளின் வலிமையான மற்றும் வெற்றிகரமான பதில்" என்று தெரிவித்தது.
ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதல் "அன்னன்சியேஷன் ஆஃப் விக்டரி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்களையும் இலக்கு வைக்கட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கத்தார் வெளியுறவு அமைச்சகம் தாக்குதலை உறுதிசெய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை சீராக இருப்பதாக உறுதியளித்ததுடன், பதற்றத்தைக் குறைக்க பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியது.
- டிரோனை நடுவானில் வெற்றிகரமாக அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தும் விதமாக நேற்று சண்டையை நிறுத்தும் இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்திய இராணுவமும் பாதுகாப்பு அமைப்பும் டிரோனை வானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்த நேரத்தில், விமானப்படை நிலையத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் பெயர் சுரேந்திர சிங் மோகா. 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவை சேர்ந்தவர். தற்போது உதம்பூர் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியில் இருந்தார். அங்கு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோனை நடுவானில் வெற்றிகரமாக அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இடிபாடுகளில் டிரோன் தாக்குதல் ஏற்படுத்திய இடிபாடுகளுக்குள் சிக்கி சுரேந்திர சிங் மோகா பலத்த காயமடைந்த நிலையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன.
- பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.
பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் கூறும்போது, விமானப்படை தளத்துக்குள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியானதாக தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது. சீன முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வரும் அந்த இயக்கம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குவாதர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






