என் மலர்
உலகம்

பாகிஸ்தானில் 'ராணுவ ஏவுகணை படை' என்ற புதிய பிரிவு உருவாக்கம் - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?
- இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
- ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.
அவ்வ்கையில் இன்று பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் போர் திறனை மேலும் மேம்படுத்த 'ராணுவ ஏவுகணை படை' என்ற தனி ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அறிவித்துள்ளார். .
இந்தியா உடனான சமீபத்திய மோதலின் எதிரொலியால், ஏவுகணைத் திறனை அதிகரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story






