என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஆர்டிஓ"

    • IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும்
    • இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும்.

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையில் அதன் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது.

    IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு முற்றிலும் உள்நாட்ட்டில் உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும். சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட்டன.

    இந்த சோதனை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் நடந்தது. இதை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS இன் வெற்றிகு DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையை நான் வாழ்த்துகிறேன்" தெரிவித்தார்.   

    • பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள், ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
    • நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் ஜெய்சால்மர் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விருந்தினர் மாளிகையின் மேனஜர் மகேந்திர பிரசாத் என்பவரை சிஐடி போலீசார் கைது செய்தனர்.

    ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது. இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அவர் கசியவிட்ட குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.
    • பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மகேந்திர பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகையின் மேலாளர் ஆவார்.

    ஜெய்சால்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.

    இது தொடர்பான நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் தேசிய அளவிலான முக்கியமான தகவல்களை கசியவிட்டதாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    • ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது.
    • துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது.

    இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில் ஆளில்லாத விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை நடத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

    "துல்லிய வழிகாட்டப்பட்ட ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ பரிசோதனை செய்தது. இது இந்தியாவின் பாதுகாப்பு திறனுக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்" என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    • அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு புதிய தோற்றம் அளிக்கப்படுகிறது.
    • 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை தரையில் ஊடுருவும்.

    நிலத்தடி எதிரி இலக்குகளை கூட அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த பதுங்கு குழி ஏவுகணைகளை இந்தியா உருவாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்த மேம்பட்ட ஆயுத அமைப்பை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

    இந்த மிகப்பெரிய திட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதற்காக, 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு புதிய தோற்றம் அளிக்கப்படுகிறது.

    இந்த புதிய வகை 7,500 கிலோ எடையுள்ள பதுங்கு குழி ஏவுகணை போர்முனையை சுமந்து செல்ல முடியும். இது 80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை தரையில் ஊடுருவி, பின்னர் வெடித்து நிலத்தடி இலக்குகளை முற்றிலுமாக அழிக்க முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சமீபத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வீசிய பெரிய குண்டுகளைப் போலவே, இந்தியாவும் இந்த ஏவுகணைகளை உள்நாட்டு அறிவுடன் உருவாக்கி வருகிறது. இருப்பினும், விமானங்கள் மூலம் வீசப்பட்ட குண்டுகளுக்குப் பதிலாக, அவை ஏவுகணைகளிலிருந்து நேரடியாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    • இந்திய கடற்படையுடன் இணைந்து டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை.
    • கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனை வெற்றி.

    கடலுக்கு அடியில் போர் திறனை வலுப்படுத்தும் சோதனையை இந்திய கடற்படையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

    கடலுக்கு அடியில் மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன் என்ற ஆயுத சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.

    ஒலி, காந்தி புலங்களை அடையாளம் கண்டறிந்து எதிரி கப்பல்களை முறியடிக்கும் திறன் கொண்டது டிஆர்டிஓ-ன் எம்ஐஜிஎம் தொழில்நுட்பம்.

    • ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
    • ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    புவனேஸ்வர்:

    பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அவை பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படுகின்றன.

    இந்நிலையில், டார்பிடோ (ஸ்மார்ட்) என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.

    ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், சூப்பர்சானிக் ஏவுகணையின் உதவியுடன் ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை அமைப்பின் வேகக் கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

    • அக்னி 4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.
    • அக்னி 4 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    புவனேஷ்வர்:

    இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

    அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    • இந்திய கடற்படை கப்பலில் இருந்து குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.
    • ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

    ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    ×