search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kim Yo-jong"

    • வடகொரியா அடிக்கடி ஜப்பான் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தி வருகிறது.
    • கொரிய தீபகற்பம் விவகாரத்தில் வடகொரியா- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான் இருந்து வருகிறது.

    தென்கொரியா மற்றும் அமெரிக்காவு தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வடகொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    இந்த விசயத்தில் தென்கொரியா- அமெரிக்காவுடன் ஜப்பான் இணைந்து வடகொரியாவை எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, வட கொரியா அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

    ஒரு டி.வி. சேனலில் பேசும்போது ஜப்பான் பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்ததாக கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அந்த டி.வி. பெயர் அவர் குறிப்பிடவில்லை.

    கிம் யோ ஜாங்

    மேலும், "இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவது ஜப்பான் கையில் உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தப்பட்ட கடந்த கால குற்றச்சாட்டை தீர்ப்பது தொடர்பான முயற்சியை கடைபிடித்தால், தனது பிரபலத்தை உயர்த்துவதற்காகவே பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற விமர்சனத்தை அவரால் தவிர்க்க முடியாது" என்றார்.

    • வடகொரியா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
    • தென்கொரியா மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

    வடகொரியாவின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். இவரது சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். சமீபத்தில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது.

    இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு "வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியது பொறுப்பற்றது. சட்டவிரோதமானது. அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுவதாக உள்ளது" என விமர்சித்திருந்தார்.

    மேலும், "எந்தவித நிபந்தனை இல்லாமமல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

    செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றார்.

    • அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    சியோல் :

    வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராப்பகை உள்ளது. இதற்கிடையே அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்பட பல ஏவுகணைகளைத் தொடர்ந்து ஏவி சோதித்து வருகிறது.

    இந்த நிலையில் வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத்தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்தது.

    இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில், "வடகொரியாவின் ஆயுதத்திட்டத்துக்கான புதிய நிதி ஆதாரமாக அமைந்துள்ள இணையவழி தாக்குதல்களுக்கு பதிலடி தருகிற விதத்திலும், அந்த நாடு அணு ஆயுத சோதனை போன்ற பெரிய ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டால் பொருளாதார தடைகளையும், பிற தடைகளையும் விதிக்க பரிசீலிப்போம்" என தெரிவித்தது.

    இந்த அறிக்கை, வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரியும், அவரது வாரிசுமாக கருதப்படுகிற அதிகாரம் வாய்ந்த கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறி இருப்பதாவது:-

    அமெரிக்கா கொடுத்த எலும்பைக் கடித்துக்கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென் கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்கப்போகிறது என்று ஆச்சரியப்படுகிறேன். என்ன, ஒரு அற்புதமான காட்சி....

    எங்கள் மீதான அமெரிக்கா மற்றும் அதன் தென்கொரிய கூலிகளின் அவநம்பிக்கையான தடைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள், தென்கொரியா மீதான விரோதத்துக்கும், கோபத்துக்கும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். மேலும் அது அவர்களுக்கு ஒரு கயிறாக இருக்கும் என்று முட்டாள்தனமான முட்டாள்களை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வட கொரியாவின, அணு ஆயுதத்திட்டம் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கருதி, அந்த நாட்டைச் சேர்ந்த 15 தனி நபர்கள் மீதும், 16 அமைப்புகள் மீதும் தென்கொரியா சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்தது நினைவுகூரத்தக்கது.

    ×