என் மலர்
நீங்கள் தேடியது "ice cream"
- நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும்.
- நுங்கு வைத்து விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.
'இயற்கை ஜெல்லி' என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும். கல்லீரல் இயக்கத்தை சீராக்கும். கொழுப்பைக் குறைக்கும். இதைக் கொண்டு விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்
நுங்கு - 10
எலுமிச்சம்பழச் சாறு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதனுடன் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அதை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.
கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.
இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும்.
இப்பொழுது நாவில் கரையக் கூடிய சில்லென்ற 'நுங்கு ஐஸ்கிரீம்' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கோடைகாலத்தில் கிடைக்கும் முலாம் பழத்தில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று குளுகுளு முலாம் பழம் கிரனிதா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1 (நடுத்தர அளவு)
எலுமிச்சம் பழச்சாறு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - ½ கப்
ஐஸ் கட்டிகள் - 8
செய்முறை:
முலாம் பழத்தை சுத்தம் செய்து, அதன் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி ஆற வைக்கவும்.
பின்பு நறுக்கிய முலாம் பழம், எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை பாகு ஆகியவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த கலவையை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி, பிரீசரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முள்கரண்டி கொண்டு அதை முழுவதுமாகக் கிளறவும்.
பின்னர் அந்த முலாம் பழக் கலவையை அழகான பவுலில் போட்டு, அதன்மேல் தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறவும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய மாம்பழம் - 2
பால் - 1 கோப்பை
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி
செய்முறை :
பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும்.
சென்னை:
ஆவின் நிறுவனம் சார்பில் 'இல்லம் தேடி ஆவின்' என்ற பெயரில் பேட்டரி தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
இதில் பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பெண்களுக்கு சுய தொழில் தொடங்கும் திட்டத்தின் கீழ் இந்த தள்ளு வண்டிகளை 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் எழிலகம் ஆவின் பாலகத்தையும் அவர் பார்வையிட்டார்.
வீடு தேடி ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் இந்த வேலைவாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டிய பெண்களுக்கு இந்த வண்டி வழங்கப்பட்டது.
வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஒரு மொபைல் செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விற்பனை செய்வதற்கு என்னென்ன ஐஸ் கிரீம்கள் எவ்வளவு வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.
மறுநாள் காலையில் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று ஐஸ்கிரீம் வினியோகம் செய்யப்படும். இதை அவர்கள் வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்யலாம்.
ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பெண்கள் கமிஷன் அடிப்படையில் வருவாய் ஈட்டலாம்.
குல்பி, கப் ஐஸ், சாக்கோபார், கசாடா, கேண்டி, பிரிமீயம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகை ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யலாம். பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். பள்ளி, கல்லூரி, குடியிருப்பு நிகழ்ச்சிகள், திருமணம், திருவிழா உள்ளிட்ட விழாக்களில் ஐஸ்கிரீம் தேவைப்பட்டாலும் இந்த பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைக்கப்படும்.
ஆவின் பாலகத்தில் ஏற்கனவே லஸ்சி, தயிர், மோர், ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடையை முன்னிட்டு வீடுகளுக்கே சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன்மோகன், ஆவின் மேலாண்மை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஃபலூடா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
- இதை கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
ஐஸ்கிரீம் செய்ய
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரெட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் -1 தேக்கரண்டி
ஃபலூடா செய்வதற்கு:
வேகவைத்த சேமியா- 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
செர்ரி பழம் - 3
முந்திரி, காய்ந்த திராட்சை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பாலை நன்கு சுண்ட காய்த்து கொள்ள வேண்டும்.
காய்ச்சிய பாலில் அதில் பிரெட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டாம். பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் சேமியா போடவும். பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும். அதன் மேல் முந்திரி, காய்ந்த திராட்சை போடவும். கடைசியாக அதில் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்
ஜில் ஜில் ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
ஹெவி கிரீம் - 1 1/2 கப்
பால் - 1/2 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
சக்கரை - 1/2 கப்
நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.

செய்முறை :
பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.
இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.
கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!
குறிப்பு:
1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
பால் - 1 கப்
ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
சர்க்கரை - 1/2 கப்
எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :
வேகவைத்த சேமியா - 1 கப்
ஜெல்லி - 1 கப்
நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)

செய்முறை :
முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.
அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்
பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.
ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.
பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.
சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.
பொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.
‘‘ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
வெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.

இது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’
‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.
இது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் உண்டாகிறது.
எனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்!’’