நள்ளிரவில் சாலையோர கடையில் 'ஐஸ்க்ரீம்' சுவைத்த நயன்

தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார். நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .
நள்ளிரவில் சாலையோர கடையில் 'ஐஸ்க்ரீம்' சுவைத்த நயன்
Published on

தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.

நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com