என் மலர்
நீங்கள் தேடியது "ice cream sales"
- வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- சாலையோரம் உணவு விற்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.
அதில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே சென்றும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து சாலையோரம் உணவு விற்பனை செய்வோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.






