என் மலர்

  நீங்கள் தேடியது "Recipes"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
  • பட்ட்ர் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  சிக்கன் - அரை கிலோ

  வெங்காயம் - 200 கிராம்

  தக்காளி - 200 கிராம்

  இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  முந்திரி விழுது - 2 தேக்கரண்டி

  கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி

  கரம் மசாலா - அரை தேக்கரண்டி

  சீரகப்பொடி - அரை தேக்கரண்டி

  தயிர் - 1 கப்

  மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

  மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

  வெண்ணெய் - 4 தேக்கரண்டி

  பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி

  கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி

  சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி

  பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2

  செய்முறை :

  சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

  வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  தயிர், கறிமசாலா, கருப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து அதில் சிக்கனை போட்டு நன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  கடாயில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

  வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  அடுத்து அதில் தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

  சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.

  ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

  தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும்.

  பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

  இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
  • இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.

  தேவையான பொருட்கள் :

  குதிரைவாலி அரிசி - ஒரு கப்

  காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்

  வெங்காயம் - ஒன்று

  தக்காளி - ஒன்று

  பச்சை மிளகாய் - 4

  இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

  நெய் - ஒரு டீஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  கொத்தமல்லி - சிறிதளவும்

  தாளிக்க:

  பட்டை, லவங்கம் - 2

  பிரியாணி இலை - 2

  மராத்தி மொக்கு - ஒன்று

  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை:

  தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

  குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

  அடுத்து காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

  குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

  இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
  • காளான் எளிதில் செரிமானமாவதுடன் மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கக்கூடியது.

  தேவையான பொருட்கள் :

  பட்டன் காளான் - 200 கிராம்

  சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

  தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )

  இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  கொத்தமல்லி - சிறிதளவு

  உப்பு - தேவையான அளவு

  செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு :

  வர மிளகாய் - 4

  தனியா - 1 தேக்கரண்டி

  மிளகு - 1/2 தேக்கரண்டி

  சீரகம் - 1/2 தேக்கரண்டி

  பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி

  துருவிய தேங்காய் - 1 கைப்பிடி

  கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )

  தாளிப்பதற்க்கு :

  எண்ணெய் - தேவையான அளவு

  பிரியாணி இலை - 1

  பட்டை - 1/2 அளவு

  கிராம்பு - 2

  ஏலக்காய் - 1

  சோம்பு - 1/2 தேக்கரண்டி

  கறிவேப்பில்லை - 2 கொத்து

  செய்முறை :

  * சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

  * காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.

  * சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

  * ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

  * பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

  * இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

  * இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.

  * காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.

  * குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

  * காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.

  * இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.

  குறிப்பு : இந்த குருமா செய்வதற்கு சின்ன வெங்காயம் உபயோகிக்கவும், பெரிய வெங்காயம் தவிர்க்கவும். வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மிதமான தீயில் வறுக்கவும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த ஸ்நாக்ஸ் சத்தானது மற்றும் சுவையானது.
  • கோதுமை கார பொரி செய்முறையை பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  கோதுமை பொரி - 100 கிராம்

  வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

  கேரட் துருவல் - 2 டீஸ்பூன்

  தக்காளி சிறியது - 1 பொடியாக நறுக்கியது

  வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன்

  மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

  மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  சாட் மசாலா - அரை தேக்கரண்டி

  எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

  கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

  உப்பு - சுவைக்கு

  எண்ணெய் - 2 தேக்கரண்டி

  செய்முறை

  * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோதுமை பொரியை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

  * அடுத்து அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், வேர்க்கடலை, உப்பு சேர்த்து வறுக்கவும். இவ்வாறு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போது இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

  சூப்பரான கோதுமை கார பொரி ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
  • பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

  தேவையான பொருட்கள்:

  பன்னீர் - 200 கிராம்

  கடலை மாவு - 1 கப்

  அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்

  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

  உப்பு - தேவையான அளவு

  எண்ணெய் - தேவையான அளவு

  செய்முறை

  பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

  ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

  இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவிலில் கொடுக்கப்படும் வெண் பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும்.
  • கோவில் வெண் பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்

  பச்சரிசி - ஒரு கப்

  சிறு பருப்பு - கால் கப்

  இஞ்சி - ஒரு துண்டு

  சீரகம் - ஒரு டீஸ்பூன்

  மிளகு - ஒரு டீஸ்பூன்

  நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  முந்திரி பருப்பு - 5

  பெருங்காயம் - கால் டீஸ்பூன்

  தண்ணீர் - 41/2 கப்,

  கறிவேப்பிலை கொத்து.

  செய்முறை

  மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும்.

  இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  அடுப்பில் கடாய் வைத்து லேசாக சூடு ஏறியதும் அரிசி, சிறு பருப்பை சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும். அரிசியை நேரடியாக அப்படியே நாம் பயன்படுத்துவதை விட, இப்படி நாம் வதக்கி சேர்க்கும் பொழுது தான் வெண் பொங்கல் கூடுதல் ருசியைக் கொடுக்கும்.

  அதன் பின்னர் ஒருமுறை அவற்றை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குக்கரில் நான்கரை(4 1/2) டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அலசிய அரிசி மற்றும் சிறு பருப்பை சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் அல்லது எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் விட்டு எடுக்க வேண்டும்.

  தாளிப்பு கரண்டியில் நெய்யை ஊற்றி லேசாக சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கிய பின்னர் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த அரிசியில் சேர்த்து அதனுடன் சிறிதளவு நெய்விட்டு அடிப் பகுதியிலிருந்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க மிக மிக ருசியான கோவில் வெண் பொங்கல் ரெடி.

  பொங்கலை பொறுத்தவரை தாளித்த பிறகு குக்கரை மூடி வைப்பதை விட அரிசி, பருப்பு வெந்து எடுத்த பிறகு தாளித்துக் கொட்டி சேர்ப்பது தான் ருசியைக் கொடுக்கும். அது போல் அரிசி பருப்பை வறுத்து சேர்த்தால் தான் கோவிலில் கொடுப்பது போல மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்களும் உங்களுடைய வீட்டில் செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
  • இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.

  தேவையான பொருட்கள்:

  பன்னீர் - 300 கிராம்

  கடலை மாவு - 1 கப்

  அரிசி மாவு - 1/4 கப்

  மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

  கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

  வெங்காயம் - 1

  பச்சை மிளகாய் - 1

  துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்

  கறிவேப்பிலை - சிறிது

  கொத்தமல்லி - சிறிது

  புதினா - 2 டேபிள் ஸ்பூன்

  உப்பு - சுவைக்கேற்ப

  பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்

  எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

  செய்முறை:

  * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

  * ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  * பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  * அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

  * பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

  * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.

  * அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாரத்தில் இரண்டு முறையேனும் கீரை சேர்த்துக் கொள்வது நல்லது.
  • இதனை சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

  தேவையான பொருட்கள்:

  பாலக்கீரை - 2 கப்

  முட்டை -2-3

  பெரிய வெங்காயம் - 1

  தக்காளி - 1

  கறிவேப்பில்லை - 1 கொத்து

  பச்சைமிளகாய் - 1

  மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  மிளகாய் தூள் - 1/2 - 3/4 தேக்கரண்டி

  உப்பு - தேவையான அளவு

  எண்ணெய் - 2 தேக்கரண்டி

  செய்முறை:

  வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  பாலக்கீரையை நீரில் சுத்தமாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  தக்காளி குழைய வதங்கியவுடன் நறுக்கிய பாலக்கீரை, மஞ்சள் தூள், கீரைக்குத் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை மிதமான தீயில் வதக்கவும்.

  கீரை 5 நிமிடங்கள் வதங்கினால் போதுமானது. கீரை வதங்கியவுடன் கலக்கி வைத்துள்ள முட்டை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள் மற்றும் முட்டைக்குத் தேவையான உப்பு சேர்த்து வறுக்கவும்.

  முட்டை பச்சை வாசனை போய் வாணலியில் ஒட்டாமல் உதிரியாக வரும் வரை வதக்கினால் பாலக் முட்டை புர்ஜி தயார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
  • கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.

  தேவையான பொருட்கள்

  கருணை கிழங்கு - 250 கிராம்

  கடலை மாவு - 1 கப்

  அரிசி மாவு - 2 டீஸ்பூன்

  மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

  ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி

  கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

  உப்பு, எண்ணெய் - தேவைக்கு

  செய்முறை

  கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

  ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
  • சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

  தேவையான பொருட்கள்

  சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்

  தோசை மாவு - 1 கப்

  எண்ணெய் அல்லது நெய் - 1 டீ ஸ்பூன்

  உப்பு - தேவையானளவு

  வெங்காயம் - 1

  கொத்தமல்லி - சிறிதளவு

  கேரட் - 1

  செய்முறை

  கேரட்டை துருவிக்கொள்ளவும்.

  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிகொள்ளவும்.

  கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

  இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுக்கலாம்.
  • இந்த புலாவ் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.

  தேவையான பொருட்கள்

  சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ

  பெரிய வெங்காயம் - 5

  நெய் - 2 தேக்கரண்டி

  எண்ணெய் - தேவையான அளவு

  இஞ்சி - ஒன்று

  சின்ன வெங்காயம் - 10

  தக்காளி - 4

  பூண்டு - 10 பல்

  மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

  கரம் மசாலா - 2 தேக்கரண்டி

  மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

  தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

  உப்பு - தேவையான அளவு

  புதினா - ஒரு கப்

  கொத்தமல்லி - ஒரு கப்

  பச்சை மிளகாய் - 4

  தேங்காய் - அரை முடி

  தாளிக்க:

  கிராம்பு

  பட்டை

  பிரிஞ்சி இலை, ஏலக்காய்

  செய்முறை :

  முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

  தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

  பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

  அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு குழைய வதக்கவும்.

  பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

  குக்கரில் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.

  வெந்ததும மூடியை திறந்து சூடாக எடுத்து பரிமாறவும்.

  சூப்பரான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ் ரெடி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
  • 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  தேவையான பொருட்கள்

  கல் தோசை - 4

  வெங்காயம் - 1

  தக்காளி - 1

  கறிவேப்பிலை - தேவைக்கு

  மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

  தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

  ப.மிளகாய் - 3

  கொத்தமல்லி - தேவைக்கு

  உப்பு - சுவைக்கு

  எண்ணெய் - 2 டீஸ்பூன்

  தாளிக்க

  கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

  செய்முறை

  கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.

  தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

  அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

  மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

  இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.

  ×