என் மலர்
நீங்கள் தேடியது "Snacks"
- கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.
- பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம்.
சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை சிறுதானிய கேக்குகள். கேழ்வரகு கேக் செய்வது மிக எளிதான ஒரு முறையாகும்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு- 100 கிராம்
கிரீம்- 100 கிராம்
பேக்கிங் பவுடர்- 1/4 டீஸ்பூன்
கொக்கோ பவுடர்- ஒரு ஸ்பூன்
சர்க்கரை- 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
முட்டை- 2
பால்- 20 மில்லி லிட்டர்
வனிலா எசன்ஸ்- 2 சொட்டு
செய்முறை:
வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடித்து, கலக்கி அதனுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மறுபடியும் நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை நமக்கு தேவையான வடிவங்களில் அல்லது கேக் மோல்டின் உள்ளே பட்டர் அல்லது நெய் தடவ வேண்டும்.
அதில் கேக் கலவையை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்து 10 நிமிடங்கள் வரை குளிர வைத்து பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
- மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.
இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.
மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.
தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
தக்காளி - 1
ஓமப்பொடி - 1 கப்
சீஸ் துருவல் - 1 கப்
சட்னி தயாரிக்க:
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
சட்னி தயாரிக்க:
ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.
சாண்ட்விச் தயாரிக்க:
வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும்.
பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டீ, காபியுடன் சாப்பிட இந்த போண்ட சூப்பராக இருக்கும்.
- இந்த ரெசிபியை 20 நிமிடத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பட்டாணி - 200 கிராம்,
கேரட் துருவல் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - 1
தக்காளி, பச்சை மிளகாய் - தலா - 2,
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு,
எண்ணெய் - 300 கிராம்,
உப்பு - தேவையான அளவு.
மேல் மாவுக்கு:
கடலை மாவு - 150 கிராம்,
அரிசி மாவு - 25 கிராம்,
மிளகாய்த்தூள், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
மசித்த பச்சை பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, கேரட் துருவல் சேர்த்துப் பிசையவும்.
இதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் தேவையான நீர் சேர்த்து தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பச்சைப் பட்டாணி போண்டா ரெடி.
குறிப்பு: பச்சைப் பட்டாணி இல்லாத சமயத்தில் உலர்ந்த பட்டாணியை ஊறவைத்து, வேகவிட்டு அரைத்து பயன்படுத்தியும் இந்த போண்டாவை செய்யலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
- டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
பச்சை வேர்க்கடலை - 50 கிராம்
வெள்ளை அவல் - 100 கிராம்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிய துண்டு
சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்க
எண்ணெய் - சமையலுக்கு
செய்முறை
பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.
வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.
வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாலைப்பொழுது, டீயுடன் வடை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.
- சக்கரவள்ளி கிழங்கில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சக்கரவள்ளி கிழங்கு - 2,
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1
நிலக்கடலை - ஒரு கப்,
அரிசி மாவு - 2 ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயில் நிலகடலையை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சக்கரவள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி விட்டு துருவிக்கொள்ளவும்.
துருவிய சக்கரவள்ளிக்கிழங்குடன் பொடித்த நிலக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக இரண்டு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவு சற்று கெட்டியாக இருந்தது என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளலாம்.
அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை வடை போன்று தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு பிசைந்து வைத்துள்ள மாவு அனைத்தையும் வடை செய்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான சக்கரவள்ளி கிழங்கு வடை ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
இட்லி - 5,
கடலைமாவு - சிறிதளவு,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
சீரகம் - சிறிதளவு,
மிளகாய்தூள் - சிறிதளவு,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு,
செய்முறை:
கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவையும் மிளகாய்தூளையும் (நீர் சேர்க்காமல்) கலந்துகொள்ளவும்.
இட்லி துண்டுகளின் மேல் இந்தக் கடலைமாவுக் கலவையை சிறிதளவு தூவிப் பிசறி, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சாறை ஊற்றி நன்றாக கெட்டியானவுடன், பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை போட்டு ஒரு புரட்டு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான 'இட்லி 65' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ரோட்டு கடையில் விற்கும் இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 10 பல்
கேரட் - கால் கப்
கோஸ் - அரை கப்
குடை மிளகாய் - கால் கப்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரெட் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், குடைமிளகாய், கேரட், கோஸ், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், கோஸ், குடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அடுத்து சாட் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
காய்கள் நன்றாக வெந்ததும், பிரெட் துண்டுகளை சேர்த்து மிதமாக கிளறிவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிரெட் மசாலா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
- இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
கேரட் - 1
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1 துண்டு
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.
ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.
அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த ஸ்நாக்ஸ் சத்தானது சுவையானது.
- இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.
தேவையான பொருட்கள் :
மைதா மாவு - 200 கிராம்,
ஏதாவது ஒரு கீரை - ஒரு கைப்பிடி அளவு,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 3
கோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 2,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
கரம் மசாலாத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், கீரை, கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை - வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கீரை வெஜிடபிள் சமோசா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health