search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murukku"

    • கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
    • சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் இனிப்பு சீடை, முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிகமுக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம். கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    வெல்லம் - 100 கிராம்

    எண்ணை - ஒரு கப்

    ஏலக்காய் பொடி- சிறிது

    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

    வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

    செய்முறை

    உளுத்தம் பருப்பு வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம். ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி  போட்டு அதில் வெல்லத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பிரித்து எடுக்கலாம். இதுதான் கிருஷ்ண சீடை.

    தீபாவளி பலகாரங்களில் இனிப்புகளை போன்று கார வகைகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இந்த தீபாவளிக்கு மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்,
    பாசிப்பருப்பு மாவு - ½ கப்,
    பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    தேங்காய் பால் - ¼ கப்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வறுத்த பயத்தம் பருப்பை நன்றாக மாவாக்கி எடுத்து கொள்ளவும்.

    அரிசி மாவு, பயத்தம் மாவு, உப்பு, தேங்காய் பால், சர்க்கரை, நெய் சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை நட்சத்திர வடிவிலான அச்சில் போட்டு வட்டவடிவமாக பிழிந்து விட்டால் மகிழம்பூ முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு தேன்குழல் முறுக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கிலோ
    தோல் நீக்கிய முழு உளுந்து - 150 கிராம்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை தண்ணீரில் அலசி கழுவிவிட்டு நிழலில் உலர்த்திக்கொள்ளவும்.

    உளுந்தை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் இரண்டையும் மாவாக இடித்து சலித்துக்கொள்ளவும்.

    பின்னர் மாவுடன் பெருங்காயத்தூள், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு சூடான எண்ணெயும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து அச்சில் போட்டு கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கொதிக்கும் எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

    சூப்பரான தேன்குழல் முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×