search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்நாக்ஸ்"

    இந்த ஸ்நாக்ஸ் செய்வது மிகவும் சுலபம். இந்த ஸ்நாக்ஸ் 10, 15 நாட்கள் வரை கெட்டு போகாது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    கருப்பு எள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) - ஒரு டீஸ்பூன்,
    புளித் தண்ணீர் - கால் கப்,
    கொப்பரைத் துருவல் - அரை கப்,
    வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன்,
    கசகசா - ஒரு டீஸ்பூன்,
    சர்க்கரை, உப்பு - சிறிதளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    செய்முறை:

    கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும்.

    கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கருப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும்.

    அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும்.

    நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும்.

    இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பாக்கர் வாடி ரெடி.

    இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு 10, 15 நாட்கள் பயன்படுத்தலாம்.
    பாதாம் பூரி இந்தியாவின் பல இடங்களில் பண்டிகைகளின் போது விருப்பமாக செய்யப்படுகிறது. இன்று இந்த பூரியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்
    சர்க்கரை - 3/4 கப்
    உருக்கிய நெய் - 1/4 கப்
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கப்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்
    உப்பு - சுவைக்கேற்ப
    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 8-10

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே 10 நிமிடங்கள் வைத்து விடுங்கள்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் ஊற்றவும். நன்றாக அதை கலந்து சர்க்கரை முழுவதும் கரையும் வரை காத்திருக்க வேண்டும்.

    அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து சர்க்கரை சிரப்பை இறக்கி தனியாக வைத்து விடவும்.

    இப்பொழுது பிசைந்த மாவை கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன பந்து மாதிரி உருட்டி பூரில் போல் தேய்த்து பூரியை முக்கோண வடிவில் எல்லா பக்கங்களையும் கவனமாக மூட வேண்டும். (சமோசா செய்வது மாதிரி).

    கடாயில் எண்ணெயை சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும்.

    பொரித்து சுடச்சுட உள்ள பூரியை சர்க்கரை பாகில் நனைத்து அப்படியே தட்டில் வைத்து பரிமாறவும்.

    அதன் மேல் துருவிய தேங்காயை தூவி அப்படியே சுவையுடன் அழகாக சாப்பிடலாம்.
    வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஆரஞ்சு பர்ஃபி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    ஆரஞ்சு பழங்கள் - 4
    சர்க்கரை சேர்க்காத கோவா - 400 கிராம்
    சர்க்கரை - 400 கிராம்
    முந்திரி, பாதாம் (பொடிதாக நறுக்கியது) - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    ஆரஞ்சு பழங்களை உரித்து, மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கி, சுளைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    கோவாவை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த கோவாவை அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில் கொட்டி அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கலவை கெட்டியான பதத்துக்கு வரும் வரை கிளறவும்.

    பின்பு அதில் ஆரஞ்சு சுளைகளைக் கொட்டிக் கிளறவும்.

    இப்போது கலவை சற்றே நீர்த்து போகும். அது மீண்டும் கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.

    கெட்டியான பதத்துக்கு வரும்போது, அதில் நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டி சமமாக்கவும்.

    ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
    காலையில் செய்ய சாதம் மீந்து விட்டால் மாலையில் அந்த மீந்த சாதத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பழைய சாதம் - 1 கப்
    முட்டை - 2
    கடலை மாவு - 1/2 கப்
    வெங்காயம் - 1
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/4 தேக்கரண்டி
    துருவிய கேரட் - 1
    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    செய்முறை :


    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    முதலில் பழைய சாதத்துடன், இரண்டு முட்டை சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.

    பின் இந்த கலவையுடன் கடலை மாவு, வெங்காயம், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

    அவற்றை நன்றாக கலந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்த கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்

    நன்றாக சிவந்து வந்தபின் பொரித்த பக்கோடாவை எடுத்து பரிமாறினால் சுவையான பக்கோடா தயார் ஆகிவிடும்.
    ×