என் மலர்
நீங்கள் தேடியது "Vadai"
- இந்த வடையை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
- டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வடை.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 6,
உளுத்தம் பருப்பு - 100 கிராம்,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பிரெட்டை பொடித்துக் கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் களைந்து... உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் பிரெட் தூள், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இப்போது சூப்பரான பிரெட் வடை ரெடி.
- ரவையில் உப்புமா, கிச்சடி செய்து இருப்பீங்க.
- இன்று ரவையில் சூப்பரான வடை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பௌலில் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு சேர்த்து கலந்து, பின் 1 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, வடை பதத்திற்கு கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். ஏனெனில் ரவை ஊறும் போது இன்றும் திக்கான பதத்தில் வரும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
பின் பிசைந்து வைத்துள்ள கலவையை எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சூப்பரான ரவா வடை ரெடி!
- மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
- கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்,
ரவை - அரை கப்,
பச்சரிசி மாவு - 3 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தயிர் - அரை கப்,
தண்ணீர் - ஒன்றரை கப்,
பச்சை மிளகாய் - 2,
பெரிய வெங்காயம் - ஒன்று,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
மிளகு பொடித்தது - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
சமையல் சோடா - கால் டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, தயிர், பச்சரிசி மாவு, தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் விட்டு கெட்டியாக கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கலவையுடன் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், மிளகைத் தூளாக இல்லாமல் இடித்து சேருங்கள்.
அதனுடன் சீரகத்தை தாளித்து சேருங்கள்.
இவற்றுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
விருப்பம் இல்லை என்றால் இவற்றை தவிர்த்து விடுங்கள். இந்த எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் இதற்கு மேல் அதிகம் எதுவும் சேர்க்க கூடாது. பின்னர் ஒரு மூடி போட்டு 10 நிமிடம் நன்கு ஊற விட்டு விடுங்கள். அப்போது தான் ரவை ஊறி இன்னும் மாவு கெட்டியாகும்,
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வடை சுடும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொதித்ததும் மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொண்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றுங்கள்.
அது அப்படியே பொங்கி மேலே எழும்பி வந்து மிதக்கும். பிறகு இருபுறமும் சிவக்க எல்லா வடைகளையும் இதே போல சுட்டு எடுத்து டீயுடன் அல்லது சாப்பாட்டுடன் கூட வைத்துக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.
சூப்பரான கோதுமை வடை ரெடி.
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.
கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.
பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.
பாஸ்தா - அரை கப்
கடலை மாவு - கால் கப்
அரிசி மாவு - கால் கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் - மரை டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாஸ்தாவில் சிறிது உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்.
குளிர்ந்த நீரில் போட்ட பாஸ்தாவை தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பெருஞ்சீரகம் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து ( வடை மாவு பதத்தில்) கொள்ளவும்.
உப்பு சரிபார்த்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான ஸ்நாக்ஸ் பாஸ்தா வடை ரெடி.
பட்டாணிப் பருப்பு - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்ட
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :
இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பட்டாணிப் பருப்பு, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
கோதுமை ரவை - ஒரு கப்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை ரவை மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரைப்பதற்கு சற்று முன் எடுத்து தண்ணீரை வடித்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
பிழிந்து வைத்துள்ள கோதுமை ரவை மற்றும் உளுந்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது ஒன்றிரண்டாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் உப்பு போட்டு நன்கு ஒன்றாகும்படி கலந்து வைக்கவும்.
அரைத்த மாவுடன், உப்பு சேர்த்து கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலவையை எடுத்து பிழிந்து விட்டு போடவும். ருசி பார்த்து விட்டு தேவையானால் உப்பு போட்டுக் கொள்ளவும்.
மாவுடன் வெங்காய கலவை ஒன்றாக சேரும்படி நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்த மாவை வடை போல தட்டியோ அல்லது விரும்பிய வடிவத்திலோ செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். எண்ணெய் சூடாகும் வரை அடுப்பை நன்றாக எரியவிட்டு, வடைகளை போட்டு பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
உளுத்தம்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
இஞ்சி - 1 துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,

செய்முறை:
உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.
அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
காலிஃபிளவர் - ஒரு கப்
கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
கசகசா - கால் டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.
இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.
பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 10
ரவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பிறகு, அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
பிரெட் துண்டுகள் - 10
வறுத்த ரவை - அரை கப்
அரிசி மாவு - இரு டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கேரட் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது

செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பிரெட்டை போட்டு உதிர்த்துக்கொள்ளுங்கள்.
இதனுடன் வறுத்த ரவை, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி துருவல், மிளகாய் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சூப்பரான பிரெட் - உருளைக்கிழங்கு வடை ரெடி.
எலும்பில்லாமல் கொத்திய மட்டன் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
சோம்பு - 10 கிராம்
கரம்மசாலாத் தூள் - 2 கிராம்
பூண்டு - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - 3 ஈர்க்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - 5 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) - 20 கிராம்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :
எலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.
பொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.