என் மலர்
நீங்கள் தேடியது "Aval Recipes"
- வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது.
- ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவும். ரத்தச்சோகை வராமல் காக்கும்.
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்,
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை - அரை கப்,
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்,
சர்க்கரை - சிட்டிகை,
வறுத்த வேர்க்கடலை, முந்திரி - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலுடன் தண்ணீர் சேர்த்து கழுவி ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்.
பிறகு அவல், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி மூடி சிறிது நேரம் வேக விடவும்.
நன்கு வெந்த பிறகு எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
மேலே வேர்க்கடலை, முந்திரி சேர்த்து சூடாக பரிமாறவும்.
- இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் மாவு - 1 கப்
பால் - 500 மி.லி
பாதாம் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - தேவைக்கு ஏற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் அவல் மாவுடன் ஒரு சிட்டிகை உப்பு, நெய் மற்றும் கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பாலுடன், பாதாம் பவுடர் கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வைக்கவும்.
5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கினால் 'அவல் பால் கொழுக்கட்டை' தயார்.
- காலையில் சத்தான உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- இன்று அவல் வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி சிவப்பு அவல் - அரை கப்,
தேங்காய்ப்பால் - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.
வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4.
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாக கழுவி தேங்காய்ப் பாலில் ஊறவிடவும்.
நிலக்கடலையை வறுத்துப் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அவலையும் (தேங்காய்ப் பால் முழுவதையும் அவல் இழுத்திருக்கும்) போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி, இறக்கும்போது வறுத்து பொடித்த நிலக்கடலை தூள், மிளகாய்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
தேங்காய்ப்பால் சேர்ந்திருப்பதால் சாப்பிட ருசியாக இருக்கும்.
- அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
- நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் - முக்கால் ஆழாக்கு
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.
இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.
இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.
அவல் - 1 கப்
எலுமிச்சை - 1
பெருங்காயத் தூள் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 2
வேர்க்கடலை - கால் கப்
கடுகு, மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவலை சில நிமிடங்கள் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் வேர்க்கடலையை கொட்டி கிளறிவிடவும்.
பின்னர் அவல், உப்பு சேர்த்து கிளறுங்கள்.
வெந்ததும் கீழே இறக்கி எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்.
அவல் - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய், நெய் - தேவைக்கு
மிளகு, சீரகம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.
மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.
பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
அவல் கார பொங்கல் ரெடி.
கெட்டியான அவல் - 500 கிராம்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
இரண்டாக உடைத்த முந்திரி - 2 டீஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு,

செய்முறை :
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து சுத்தம் செய்த அவலை பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே போல் கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த திராட்சையை தனித்தனியே எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
பொரித்த அவலுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் தோல் நீக்கி வறுத்த வேர்க்கடலையைச் சேர்க்கவும்.
பொரித்த முந்திரி, காய்ந்த திராட்சை, கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக கலந்து பரிமாறவும்.
அவல் - 1 கப்
கேரட் - 2
பட்டாணி - 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கேரட் மற்றும் பட்டாணியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
பின்னர் அவலை நீரில் போட்டு, அவல் நீரில் மூழ்கும் வரை ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் அதில் வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, மசாலாப் பொருட்கள் காய்கறியுடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள அவலை பிழிந்து, நீரை முற்றிலும் வெளியேற்றிவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, கொத்தமல்லி மற்றும் வேர்க்கடலையைத் தூவி ஒருமுறை பிரட்டி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி!!!