search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொரிகடலை அரிசி கஞ்சி
    X
    பொரிகடலை அரிசி கஞ்சி

    குழந்தைகளுக்கு சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி

    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    Next Story
    ×