என் மலர்
நீங்கள் தேடியது "Dosa"
- நீரிழிவு நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துமிகுந்த உணவாக கோதுமை இருக்கிறது.
- கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு
செய்முறை :
* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு கோதுமை தோசை ரெடி!!
- உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் உணவில் பச்சைப்பயறை சேர்த்து கொள்ளலாம்.
- பச்சைப் பயறினை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - ஒரு கப்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 10,
பச்சை மிளகாய் - 3 ,
தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
சின்னவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைப் பயறுடன் கடலைப் பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
பச்சைப் பயறு மாவுடன் அரைத்த விழுது, அரிசி மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெசரெட் ரெடி.
- ஆண்மை அதிகரிக்க புதினாவை உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் ரத்தம் சுத்தமடையும்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கப்
கொத்தமல்லி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 5
புதினா - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, ப.மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.
* வதக்கியவற்றை ஆறவைத்து சிறிது உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த விழுதை தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.
* சத்தான சுவையான புதினா கொத்தமல்லி தோசை ரெடி..
- மாலையில் குழந்தைகளுக்கு இந்த சிற்றுண்டியை செய்து தரலாம்.
- இந்த தோசை சுவையானதும் மட்டுமல்ல சத்தானதும் கூட.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
வெல்லம் (பொடித்தது) - 1 கப்,
பச்சரிசி மாவு - கால் கப்,
தேங்காய் (துருவியது) - கால் மூடி,
ஏலக்காய் - 4,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும்.
வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.
வெல்லத்திற்கு பதில் கருப்பட்டியை சேர்த்தும் செய்யலாம்.
- பொடி தோசையில் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவையான அளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, கலந்து வைத்த வெங்காய கலவையை தோசை மேல் தூவி அதன் மேல் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், சூப்பரான வெங்காய பொடி தோசை ரெடி!!!
- வித்தியாசமான உணவுகளை செய்து தந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- இன்று ரவையை வைத்து சுவையான மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவை - 150 கிராம்
தயிர் - அரை கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 4 மணிநேரம் புளிக்க வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின் மசித்து வைத்துள்ள உப்பு, உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும்.
இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் செய்து வைத்த மசாலாவை தோசையின் நடுவில் வைத்து உருட்டி சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும்.
இப்பொழுது சூப்பரான ரவா மசாலா தோசை ரெடி.
- சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபி செய்ய 5 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
இட்லி பொடி - தேவைக்கேற்ப
நெய் - விருப்பத்திற்கேற்ப
செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெலிதாக ஊற்றி சுற்றி நெய் விடவும்.
பின்னர் அதன் மேல் இட்லி பொடியை பரவலாக தூவி தோசை மொறு மொறு என்று வந்ததும் இரண்டாக மடித்து எடுத்து பரிமாறவும்.
இந்த தோசையை திருப்பி போடக்கூடாது.
இப்போது அருமையான மொறு மொறு நெய் பொடி தோசை ரெடி.
- காய்கறிகள் சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
- காலையில் மீந்து போன மாவில் மாலையில் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - 2 கப்
வெங்காயம்- 1,
பீன்ஸ் - 10,
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1,
கொத்தமல்லி - சிறிதளவு,
ப.மிளகாய் - 2,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், பீன்ஸ், கோஸ், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், பீன்ஸ், கோஸ், உப்பு சேர்த்து வேக விடவும்.
காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் அதை கரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, அதனுடன் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான வெஜிடபிள் தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள ஏதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம். விருப்பமான காய்கறிகள் எதை வேண்டுமானலும் இதில் சேர்த்து கொள்ளலாம்.
- எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
- சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் பி, வைட்டமின் டி, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 75 கிராம்
தோசை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையானளவு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1
செய்முறை
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கிழங்குடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த கிழங்குடன் தோசை மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை ரெடி.
- பாலக்கீரையை தினமும் சாப்பிட்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
- இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க பாலக்கீரை உதவுகிறது.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
பாலக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரண்டு வகை அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து, தனித்தனியாக அரைத்து, ஒன்றாக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை, சீரகம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும், அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான சத்தான பாலக்கீரை தோசை தயார்.
ஊறுகாயுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்!
வெள்ளை சோளம் - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.
பச்சை பயறு - 1 கப்
அரிசி - 3 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி - 1 இன்ச்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைத்து நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பயறு தோசை ரெடி!!!
இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.