என் மலர்
நீங்கள் தேடியது "Engineer"
- வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
- அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசிய வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பரபரப்பாக காணப்படும் இடத்தில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் புகுந்த ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 12.20 மணி அளவில் கண்ணாடி அணிந்து வந்த அந்த நபர், 2 முககவசம் அணிந்து இரும்பு கம்பியால் உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதன் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை போலீசார் ரோந்து சென்றபோது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வடக்கு பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் (வயது35) என்பது தெரிந்தது. பி.இ படித்துள்ள சிவச்சந்திரன் மதுரையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்து வீட்டில் இருந்துள்ளார்.
இவர் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழாத நிலையில் தன்னுடன் வேலைபார்த்தவரை 2-வதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தாராம்.
வேலை இழப்பு மற்றும் செலவிற்கு பணம் இல்லாதது, மனைவி பிரிந்து சென்றது போன்ற காரணங்களினால் மனம் உடைந்து காணப்பட்ட சிவச்சந்திரன் அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் மருது சக்கரவர்த்தி (வயது 35). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த அனெட் (32) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல அது காதலாக மாறியது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமணத்துக்கு பிறகு கிராம பின்னணி கொண்ட கம்பம் நகரில் வசிக்க வேண்டும் என்று தனது காதலிக்கு மருது சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.
நகர வாழ்க்கையை விட கிராம வாழ்க்கையே சிறந்தது என அவரது காதலி தெரிவிக்கவே இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இந்து மத சடங்குகள் பின்பற்றப்பட்டு மணப் பெண்ணுக்கு பட்டுச்சேலை, மண மகனுக்கு பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடந்தது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அயர்லாந்து மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து வந்தது அங்கிருந்த கிராம மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அயர்லாந்து பெண்ணை கம்பம் வாலிபர் திருமணம் செய்த சம்பவம் கேள்விப்பட்டு அப்பகுதி முழுவதும் ஏராளமானோர் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் ஒருவர் சேலத்தை சேர்ந்த 22 வயது என்ஜினீயருடன் பேஸ்புக் மூலம் அறிமுகமானார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதனை அறிந்த 2 பேரும் பேஸ்புக் மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மற்றும் படங்கள் அனுப்பியும், பேஸ்புக் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
எத்தனை நாளுக்கு தான் தூரத்தில் இருந்து பேசுவது என்று நினைத்த இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை என்ஜினீயர், பெண் டாக்டரிடம் தெரிவித்தார். உடனே அதற்கு சம்மதித்த பெண் டாக்டர் சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.
அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டல் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த ஜோடியினர் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அந்த ஜோடி வந்தது. அப்போது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், விஷம் குடித்ததாகவும் மாறி, மாறி கூறினார்.
உடனே ஓட்டல் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை பெண் டாக்டர், என்ஜினீயரின் உறவினர்களுக்கும் தெரிவித்தார். அதனால் அவர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். தொடர்ந்து டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது: அதன் விவரம் வருமாறு:-
ஓட்டல் அறையில் மயங்கி விழுந்த பெண் டாக்டர் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தையும் டாக்டர். சேலத்தில் காதலனுடன் ஓட்டல் அறையில் 10 நாட்கள் உல்லாசம் அனுபவித்ததால் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் டாக்டர் வற்புறுத்தினார்.
இதற்கு என்ஜினீயர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் ரூ.25 லட்சத்தை பெண்டாக்டரிடம் இருந்து செலவுக்கு என்ஜினீயர் வாங்கியுள்ளார். ஓட்டலில் தங்கியதற்கான பணத்தையும் அந்த பெண் டாக்டரே வழங்கினார்.
இதனால் மனம் உடைந்த பெண் டாக்டர் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மகராஷ்டிராவில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலறியடித்த படி சேலத்திற்கு விரைந்துள்ளனர்.
திருமணத்திற்கு என்ஜினீயர் மறுத்தால் அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பெண் டாக்டரின் கற்பை சூறையாடி திருமணத்திற்கு மறுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#facebooklove
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் கடந்த ஓராண்டாக அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டை உடைத்து தொடர்ந்து நகை கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கெங்கைராஜ், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேளச்சேரி உள்வட்ட சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் யாதமாரி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் மதன்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி இருந்தார். இதனையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
போலீசாரிடம் மதன்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து உள்ளேன். சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. மேலும் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டேன். ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வேலைக்கு செல்லும் தம்பதிகளின் வீடுகளை நோட்டமிட்டேன். அங்கு வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டேன்.
வீடுகளில் திருடிய நகைகளை உருக்கி விற்று அதில் வரும் பணத்தில் தாய்லாந்து சென்று அங்குள்ள மசாஜ் சென்டர்களில் உல்லாசமாக இருப்பேன். சென்னையில் உள்ள வேலைக்கு செல்பவர்கள் வசிக்கும் பகுதிகள் எது? என்று இன்டர்நெட் மூலமாக தேடினேன். அப்போது ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளை காட்டியது.
இதையடுத்து கடந்த ஓராண்டாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து அவற்றை விற்று தாய்லாந்து சென்று உல்லாசமாக இருந்து வந்தேன். வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசாரிடம் சிக்கி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மதன்குமாரிடம் இருந்து 130 பவுன் தங்க நகைகள், 2½ கிலோ வெள்ளிப்பொருட்களை போலீசார் மீட்டனர். மேலும் மதன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகன் அய்யம்பெருமாள். இவரது மகன் சாமிநாதன் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இது குறித்து அவர் தனது பெற்றோரிடம் தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் படி கடந்த 2 வருடங்களாக கூறி வந்தார்.
அதற்கு அவரது பெற்றோர் வயது 25 தான் ஆகிறது. இன்னும் 1 வருடம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறியதாக தெரிகிறது. பெற்றோர் திருமணம் செய்து வைக்க காலம் தாழ்த்தி வந்ததால் கடந்த சில நாட்களாக சாமிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரத்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
பின்னர் தனது நண்பர்களுக்கு போன் செய்து விஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். அவர்கள் உடனடியாக வீட்டுக்கு விரைந்து வந்து சாமிநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
திண்டுக்கல்:
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர் ராஜசேகரன். இவரது மகன் நவீன் சேகரன். என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் ஜெர்மனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ பெண்ணான தெரஸா ஹாபர்ள் என்பவருடன் காதல் ஏற்பட்டது.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொள்வார்களா? என தயக்கம் இருந்தது. இருந்த போதும் நவீன் சேகரன் தனது காதலியின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார்.
அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடனே இந்த திருமணம் நடக்க வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
அதன்படி திண்டுக்கல் வந்த நவீன் சேகரன் தனது பெற்றோரிடம் ஜெர்மன் பெண்ணுடனான காதலை தெரிவித்தார். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணுக்கு காலில் மெட்டி அணிவிப்பது, பெற்ற தாய் தந்தைக்கு கால்களை கழுவி பாத பூஜை செய்வது, சம்மந்திகள் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சடங்குகள் நடந்தது.
அதன் பின் வேத மந்திரங்கள் முழங்க தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்காக ஜெர்மனியில் இருந்து 70-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்து முறைப்படி ஆண்கள் வேஷ்டி சட்டையுடனும், பெண்கள் பட்டுப்புடவையுடன் தலையில் பூ வைத்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டணம், வளையல்காரத் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் மகன் காஜா (வயது 27), என்ஜினீயர். இவர் பக்ரீத் பண்டிகைக்காக மதுரையில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்தார்.
பின்னர் நண்பர்களுடன் டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் கோவில் தெப்பத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்றார்.
அப்போது அங்கு ஏற்கனவே கிரிக்கெட் விளையாடிய சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் எதிர் தரப்பினர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் காஜா, குல்முகமதீன், பைசூல் வகிதின் ஆகியோர் காயமடைந்ததாக திடீர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திடீர்நகரைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (22), பகத்சிங் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். #tamilnews
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.