என் மலர்

    நீங்கள் தேடியது "ganja sales"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்

    போரூர்:

    மதுரவாயல், அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரியான ரிஷி(23), என்ஜினீயரிங் பட்டதாரிகளான ரூபஸ்(23), அவினாஷ்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் மூலம் கோய முத்தூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் விசார ணையில் தெரிய வந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துரைசாமியாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • முத்துக்குமார்,இருளப்பா ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செங்கோட்டை:

    இலத்தூர் அருகே துரைசாமியாபுரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், தலைமைக்காவலர்கள் கோபி, மாரியப்பன், முதல் நிலைக் காவலர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஊர் மேலழகியான் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் விருதுநகர் இருளப்பா ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்.
    • இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்டவர்கள் உறுதிமொழி.

    பல்லடம் :

    பல்லடம், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, மற்றும் உபயோகித்து வந்து,போலீசாரால் இந்திய தண்டனை சட்டம் 109ன் கீழ் கைது செய்யபட்ட 27 பேர் மனம் திருந்தி வாழவும், இனி வரும் நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டேன்,கஞ்சா உபயோகபடுத்த மாட்டேன்என்கிற உறுதி மொழியை பல்லடம் வட்டாட்சியரும், வருவாய் துறை வட்ட நடுவருமான நந்தகோபால் முன்னிலையில் ஏற்றனர்.

    அவர்கள் ஒரு ஆண்டு பிணையத்தால் (ஜாமீன்) விடுவிக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் இருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
    • போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ஜி. பாபு மாற்றப்பட்டு புதிய போலீஸ் கமிஷனராக பிரபாகரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாநகர கமிஷனராக பொறு–ப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாநகரில் கஞ்சா விற்பனையை முழுமையாக தடுக்கும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அதேபோல் இரவு நேரங்களில் அதிகப்படியான போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

    அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, போதைப் பொருள்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெகமம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெகமம்:

    நெகமம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெகமம் என்.சந்திரபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியனை (வயது 66) கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கோவை வெள்ளலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த, அதேபகுதி கோன வாய்க்கால் பாளையம் போயர் தெருவை சேர்ந்த டேவிட் ராஜாவை (வயது 23) போதனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள காலாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சில மர்மநபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பச்சாபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 31), தீத்திபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1ž கிலோ கஞ்சா, ரூ. 1,200 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமங்கலம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர, மாவட்ட போலீசார் தீவிரம் காட்டியதாக தெரியவில்லை. திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மேலஉரப்பனூர் பகுதியில் உள்ள பள்ளியின் முன்பு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மலைச் சாமி (வயது45) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.பி. சத்திரத்தில் கஞ்சா பதுக்கி விற்ற 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அமைந்தகரையை அடுத்த டி.பி. சத்திரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை மற்றும் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துனை கமி‌ஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உதவி கமி‌ஷனர் ஜெகதீசன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கு உள்ள குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறிய பொட்டலங்கள் போட்டு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற குணசேகரன், கருப்பு என்கிற ஞானசேகரன், தமிழரசன், செந்தில்குமார், வினோத்குமார், கவணன், வினோத், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கீர்த்தி வாசன், சரத்குமார் உள்ளிட்ட 9 பேரையும் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்

    மேலும் டிபி சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக புகுந்து தொடர்ந்து சோதனை நடத்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எலச்சிபாளையம் அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசம் தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அந்த நபரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் பிளாஸ்டிக் கவரில் 225 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் அவர் பர்கூர் கிராமம், எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது கர்நாடக மாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆரோவில் அருகே கஞ்சா விற்று கைது செய்யப்பட்ட லிபியா நாட்டு மாணவர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் உள்ளது. சர்வதேச நகரமான இங்கு பல்வேறு வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே ஆரோவில் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெரியமுதலியார் சாவடியில் ஒரு வீட்டில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லிபியா நாட்டை சேர்ந்த ‌ஷபீது (வயது23) என்பதும் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.ஏ. படித்து வந்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர் பெரிய முதலியார் சாவடியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வெளிநாட்டு மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ‌ஷபீதுவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் செஞ்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ‌ஷபீதுவின் பாஸ்போர்ட் காலாவதியான பின்னரும் அவர் தொடர்ந்து பெரியமுதலியார் சாவடியில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இதுபற்றி லிபியா நாட்டு தூதரகத்துக்கு தகவல் அளித்து உள்ளனர். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print